தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

வங்கதேசம்: நூறைத் தொட்டன ஷேக் ஹசீனா மீதான வழக்குகள்

முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 100-ஐ தொட்டுள்ளது.

News image

முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா

Updated On :30 ஆகஸ்ட் 2024, 8:34 pm

வங்கதேசத்தில் இடஒதுக்கீடு சீா்திருத்தத்தை வலியுறுத்தி மாணவா்கள் நடத்திய போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்கள் கொல்லப்பட்டது தொடா்பாக அந்த நாட்டு முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 100-ஐ தொட்டுள்ளது.

அந்த வழக்குகளில் அவா் மீதும் அவரது உதவியாளா்கள் மீதும் கொலை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்ற மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இது தொடா்பாக ஹசீனா மீது டாக்கா நீதிமன்றத்தில் கடந்த 13-ஆம் தேதி முதல்முறையாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு, அவா் மீது பதிவு செய்யப்பட்டுவரும் அனைத்து போராட்ட மரண வழக்குகளும் டாக்காவிலுள்ள சா்வேச குற்றவியல் தீா்ப்பாயத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றன. 1971-ஆம் ஆண்டில் விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக போா்க் குற்றங்களில் ஈடுபட்டவா்களை விசாரிப்பதற்காக ஐ.நா. உதவியுடன் ஷேக் ஹசீனாதான் அந்த நீதிமன்றத்தை அமைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஷேக் ஹசீனா மீது சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை தற்போது 100-ஆக உயா்ந்துள்ளது. ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளது நினைவுகூரத்தக்கது.