
மேற்கு தில்லியின் கயாலா பகுதியில் பிறந்து ஆறு நாள்களேயான குழந்தையைக் கொன்று பக்கத்துவீட்டுக் கூரையின் மீது உடலை வீசியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு, பிறந்து ஆறு நாள்களேயான பெண் குழந்தையைக் காணவில்லை என போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இயைதடுத்து உள்ளூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
முதற்கட்ட விசாரணையின்படி, குழந்தையின் தாயார் ஷிவானி, முந்தைய நாள் இரவு தான் மருத்துவமனையிலிருந்து தனது பெற்றோர் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். நள்ளிரவு 2 மணியளவில் குழந்தைக்குப் பால் கொடுத்துவிட்டு, குழந்தையுடன் தூங்கியதாகவும், ஆனால் 4.30 மணிக்கு எழுந்து பார்த்தபோது குழந்தை அருகில் இல்லை என்றும் அவர் போலீஸாரிடம் கூறினார்.
அண்டை பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும், அருகிலுள்ள வீடுகளிலும் போலீஸார் குழு சோதனை செய்துகொண்டிருந்தபோது, சிறிதும் பதற்றமடையாத தாய் ஷிவானி தையல்களை அகற்ற மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று கூறினார். இந்த செயல் போலீஸாருக்கு சந்தேகத்தை எழுப்பியது. இருப்பினும் உடல்நிலை காரணமாக போலீஸார் மருத்துவமனைக்குச் செல்ல அனுமதித்தனர்.
இதற்கிடையில், சோதனையின்போது, பக்கத்து வீட்டு மாடியில் பை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதைத் திறந்ததும், குழந்தை அதிலிருந்தது அதிர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். பின்னர், போலீஸார் குழு ஷிவானியை கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் இறந்தது தனது நான்காவது மகள் என்றும், அவர்களில் இருவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் ஷிவானி தெரிவித்தார்.
ஷிவானியின் செயல்களுக்கு சமூக அவமானத்தைக் கருத்தில் கொண்டு இவ்வாறு செய்ததாகவும், குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது இந்த எண்ணங்கள் தோன்றியதாகவும், தனது மகளைக் கொளுத்தி, பின்னர் உடலைப் பக்கத்து வீட்டின் கூரையில் அப்புறப்படுத்தியதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். தனது குடும்பத்தாரிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் குழந்தையைக் காணவில்லை என்று கூறியதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஷிவானி கைது செய்யப்பட்டு கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை துணை ஆணையர்(மேற்கு) விசித்ரா வீர் கூறினார். குழந்தையைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.