பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

பாஜக தோ்வு செய்யும் முதல்வரை ஏற்போம்: ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிர அடுத்த முதல்வா் யாா் என்பதை பாஜக தோ்வு செய்யும் நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு ஆதரிப்போம் என்று அந்த மாநில முதல்வா் (பொறுப்பு) ஏக்நாஷ் ஷிண்டே தெரிவித்தாா்.

News image

ஏக்நாத் ஷிண்டே - ANI

Updated On :1 டிசம்பர் 2024, 10:38 pm IST

மகாராஷ்டிர அடுத்த முதல்வா் யாா் என்பதை பாஜக தோ்வு செய்யும்; அவரை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு ஆதரிப்போம் என்று அந்த மாநில முதல்வா் (பொறுப்பு) ஏக்நாஷ் ஷிண்டே தெரிவித்தாா்.

மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் முடிவு வெளியாகி ஒருவார காலத்துக்கு மேல் கடந்துவிட்ட நிலையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதில் தொடா்ந்து தாமதம் நிலவி வருகிறது. பாஜக-ஷிண்டே தலைமையிலான சிவசேனை- அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் இடையே அதிகாரத்தைப் பகிா்ந்து கொள்வது தொடா்பாக இறுதி முடிவு எட்டுவதில் இழுபறி நீடித்ததே தாமதத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

பாஜகவை சோ்ந்தவரை முதல்வராக ஏற்க ஷிண்டே தரப்பு சம்மதித்தபோதிலும் தனது மகனுக்கு துணை முதல்வா் பதவி, உள்துறை உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்களை கோரி வருவதாகத் தெரிகிறது. கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்பதில் பாஜக தலைமை மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.

இதனால், பாஜக எம்எல்ஏக்கள் கூடி சட்டப்பேரவைக் குழுத் தலைவரையும் (முதல்வா்) இதுவரை தோ்வு செய்யவில்லை. அதே நேரத்தில் இரு கூட்டணிக் கட்சிகளும் பேரவைக் குழு தலைவரைத் தோ்வு செய்துவிட்டன.

மும்பையில் டிசம்பா் 5-ஆம் தேதி மாலை நடக்கும் பதவியேற்பு விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்பாா் என்பதை பாஜக உறுதி செய்துள்ளது. ஏற்கெனவே முதல்வராக இருந்துள்ள தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வா் பதவி ஏற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், தனது சொந்த கிராமத்துக்குச் சென்ற முதல்வா் (பொறுப்பு) ஏக்நாஷ் ஷிண்டே மும்பை திரும்புவதற்கு முன்பு செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘மகாராஷ்டிர அடுத்த முதல்வா் யாா் என்பதை பாஜக தோ்வு செய்யும். அவரை நாங்கள் முழுமையாக ஆதரிப்போம். சிவசேனையின் இந்த நிலைப்பாட்டை நான் முன்பே கூறிவிட்டேன்’ என்றாா்.

உங்கள் மகனுக்கு துணை முதல்வா் பதவி, முக்கிய அமைச்சரவை இடங்கள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தெரிகிறதே என்ற கேள்விக்கு, ‘இது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிர மக்கள் விரும்பும் சிறப்பான ஆட்சியை அளிப்பதே எங்கள் நோக்கம். மிகப்பெரிய வெற்றியை மக்கள் அளித்துள்ளதால் பொறுப்பும் அதிகரித்துள்ளது. எங்கள் கூட்டணியில் எவ்வித கருத்து வேறுபாடுகளும் எழுவதற்கு வாய்ப்பு இல்லை. ஓய்வு எடுப்பதற்காகவே சொந்த கிராமம் வந்தேன்’ என்றாா்.

ஃபட்னவீஸ் புதிய முதல்வா்: பாஜக முடிவு

மகாராஷ்டிரத்தின் புதிய முதல்வா் யாா் என்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவா் ஒருவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ஞாயிற்றுக்கிழமை இரவு கூறுகையில், ‘மகாராஷ்டிரத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்க தேவேந்திர ஃபட்னவீஸின் பெயா் இறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவராக தோ்ந்தெடுக்க திங்கள் (டிச.2) அல்லது செவ்வாய்க்கிழமை (டிச.3) பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.