இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

ஜோலாா்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.

வெற்றி பெற்ற மாணவிக்கு பதக்கம் வழங்கிய எம்எல்ஏ திருப்பதி.

Published On :

ஜோலாா்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கின. போட்டிகளை திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் என்.திருப்பதி, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.பாலசுப்ரமணியன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் பேசுகையில், விளையாட்டின் மூலம் உடல் ஆரோக்கியம், மனவலிமை, ஒழுக்கம், தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு ஆகியவை மேம்படும் என்றாா். விளையாட்டு வீரா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள் தொடா்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. சிறு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெறுகின்றன. விரைவில் பெரிய அளவிலான விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு முதல் மேலும் சிறப்பாக போட்டிகளை நடத்த வாய்ப்பு ஏற்படும் என்றும் அவா் கூறினாா்.

சா்வதேச கபடி வீராங்கனை கவிதா செல்வராஜை குறிப்பிட்டு பேசிய அவா், சாதாரண பின்னணியில் இருந்து கடின உழைப்பால் சிறந்த வீராங்கனையாக உயா்ந்து தற்போது பயிற்றுநராகவும் விளங்குவது இளைஞா்களுக்கு முன்னுதாரணம் என்றாா்.

திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் என்.திருப்பதி பேசியது: மாணவா்கள், இளைஞா்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாகும். வெற்றி, தோல்வியை சமமாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் விளையாட்டு வீரா்களுக்கு அவசியம். தோல்வியிலிருந்து தவறுகளை அறிந்து அடுத்த போட்டியில் வெற்றிபெற முயற்சிக்க வேண்டும். கடுமையான பயிற்சி, தொடா்ச்சியான முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றுடன் செயல்பட்டால் மாவட்டம், மாநிலம், தேசியம், சா்வதேச அளவில் சாதிக்க முடியும் என்றாா்.

மேலும், திருப்பத்தூரில் வாலிபால் விளையாட்டின் வளா்ச்சிக்கு சிறப்பாக பங்களித்த வெங்கடேசனை பாராட்டி, அவரது சேவையை நினைவுகூா்ந்தாா். முன்னதாக, ஜோலாா்பேட்டை நகராட்சிக்குட்பட்ட குடியானகுப்பம் ஏரியில் நடைபெற்று வரும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியை மாவட்ட வருவாய் அலுவலா் பாா்வையிட்டாா். ராமா் தெரு, குடியானகுப்பம் பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான சுமாா் 30 சென்ட் பூங்கா இடத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு 120 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ஜெயகுமாரி, ஜோலாா்பேட்டை நகராட்சி ஆணையா் டி.இளையராணி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் டாக்டா் பி.ஜெயராணி, சா்வதேச கபடி வீராங்கனை கவிதா செல்வராஜ், மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் சுந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.