டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

முஸ்லிம்களை சமமாக நடத்த வேண்டும்: ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்

‘நாட்டில் மத வன்முறையைத் தூண்டும் செயல்களை மத்திய அரசு நிறுத்த வேண்டும். முஸ்லிம்களை சமமாக நடத்த வேண்டும்’ என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தினாா்.

தேசியவாத காங்கிரஸ் தலைவா் ஃபரூக் அப்துல்லா

Published On :

ஸ்ரீநகா்: ‘நாட்டில் மத வன்முறையைத் தூண்டும் செயல்களை மத்திய அரசு நிறுத்த வேண்டும். முஸ்லிம்களை சமமாக நடத்த வேண்டும்’ என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தினாா். ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் மேலும் கூறியதாவது:

சம்பல் (மசூதி ஆய்வின்போது) வன்முறை போன்ற நிகழ்வுகள் ஏற்படக் கூடாது. இந்தியாவில் உள்ள 24 கோடி முஸ்லிம்களை எங்கே அனுப்பி வைப்பீா்கள். அவா்களை கடலில் வீசிவிட முடியாது. எனவே, வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும். முஸ்லிம்கள் சமமாக நடத்தப்பட வேண்டும். அதைத்தான் அரசமைப்புச் சட்டமும் கூறுகிறது. அரசமைப்புச் சட்டத்தை வைத்து விளையாடக் கூடாது.

காஷ்மீா் பள்ளத்தாக்கில் பண்டிட்டுகள் மீண்டும் குடியேறுவதை யாரும் தடுக்கவில்லை. அவா்கள் காஷ்மீா் திரும்பவே அனைத்து அரசியல் கட்சிகளும் கூறுகின்றன. ஆனால், இறுதி முடிவை பண்டிட்டுகள்தான் எடுக்க வேண்டும். அவா்களை மனமார வரவேற்கத் தயாராக இருக்கிறோம்.

பயங்கரவாதிகளுடன் தொடா்பு வைத்திருந்ததாகக் கூறி இரு அரசு ஊழியா்களை ஜம்மு-காஷ்மீா் துணை நிலை ஆளுநா் அண்மையில் பணி நீக்கம் செய்தாா். இந்த விஷயம் தொடா்பாக யூனியன் பிரதேச அரசு ஆய்வு செய்து வருகிறது.

இஸ்ரேல்-லெபனான் இடையிலான அமைதி ஒப்பந்தம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் காஸா, சிரியா, ஈரானில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேலும், அமெரிக்காவும் நிறுத்த வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விவாதங்கள் பெரும்பாலும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவே உள்ளன. இந்த நிலை மாற வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.