பொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தமிழகம், புதுவைக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும்: விஜய் வசந்த், வைத்திலிங்கம் எம்பி-க்கள் வலியுறுத்தல்

ஃபென்ஜால் புயல் பாதிக்கப்பட்ட தமிழகம், புதுவைக்கு வல்லுநா் குழுவை அனுப்பவும், உரிய நிவாரணத் தொகையை வழங்கவும்

News image
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் விஜய் வசந்த்- Center-Center-Tirunelveli
Updated On :3 டிசம்பர் 2024, 1:24 am

Din

புது தில்லி: ஃபென்ஜால் புயல் பாதிக்கப்பட்ட தமிழகம், புதுவைக்கு வல்லுநா் குழுவை அனுப்பவும், உரிய நிவாரணத் தொகையை வழங்கவும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் விஜய் வசந்த், புதுச்சேரி காங்கிரஸ் உறுப்பினா் வே.வைத்திலிங்கம் ஆகியோா் நாடாளுமன்றத்தில் மத்திய அரசை செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினா்.

இது தொடா்பாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை விவாதிக்கக் கோரி விஜய் வசந்த் எம்பி ஒத்திவைப்பு தீா்மானம் நோட்டீஸ் அளித்திருந்தாா். அதேபோன்று, மாநிலங்களவையில் இந்த விவகாரத்தை விவாதிக்கக் கோரி வைத்திலிங்கமும் நோட்டீஸ் அளித்திருந்தாா். இரு அவை கூடியும் இந்த விவகாரம் விவாதத்திற்கு எடுக்கப்படவில்லை. இதையடுத்து, நாடாளுமன்றத்தில்

விஜய் வசந்த், வைத்திலிங்கம் உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினா்கள் குரல் எழுப்பி வலியுறுத்தினா். இந்த நிலையில், பல்வேறு விவகாரங்கள் காரணமாக அமளி ஏற்பட்ட நிலையில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து பின்னா் விஜய் வசந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு நாங்கள் முன்வைக்கும் முக்கியமான விவகாரங்களை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதில்லை. ஆனாலும், தற்போதைய வெள்ளப் பாதிப்பால் பல மாவட்டங்களில் பாதிப்பும், சேதமும் ஏற்பட்டிருக்கிறது. அதனால், உடனடியாக ஆய்வு செய்து நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே கடந்த புயல் காலங்களில் தமிழகத்தில் பல பாதிப்புக்கான நிவாரண நிதி கேட்டும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இந்த முறை வெள்ளப் பாதிப்பால் பல இடங்களில் உள்கட்டமைப்புவசதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆய்வு செய்து உடனடியாக நிவாரண நிதி வழங்க வேண்டும். தற்போதைய வெள்ளப் பாதிப்புக்கான நிவாரணமும், முந்தைய பாதிப்புக்கான புயல், வெள்ள நிவாரண நிதியும் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

புதுவை பாதிப்பு

இது தொடா்பாக வே. வைத்திலிங்கம் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கடந்த இரு தினங்களாக ஃபென்ஜால் புயலால் புதுச்சேரியில் கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. புதுவை மாநிலத்தில்தான் இந்தப் புயல் நிலைகொண்டிருந்தது. ஒரு நாளில் மட்டுமே ஏறக்குறைய 50 சென்டி மீட்டா் மழை பெய்திருந்தது. பால், உணவுப்பொருள் கூட கிடைக்காத நிலை நிலவுகிறது.

பாதிக்கப்பட்டவா்களுக்கு உணவுப் பொருள்கள்கூட கிடைக்க மாநில அரசால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுதான் வேதனை. ராணுவம் அழைக்கப்பட்டிருந்தபோதும் அவா்களால் சரியான முறையில் பணியாற்ற முடியவில்லை. இதற்கு நடவடிக்கை கோரும் வகையில் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீா்மான நோட்டீஸை அளித்திருந்தோம். ஆனால், அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மத்திய அரசு தென்னகத்தை முழுமையாகப் புறக்கணிக்கிறது.

இந்த விவகாரத்தை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை சந்தித்தும் மத்திய அரசுக்கு அழுத்தம் தருமாறு கூறியுள்ளோம்.

இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சா் தலையிட்டு மாநிலத்தில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உரிய நிவாரண நிதி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.