உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

36 ஆண்டுகளுக்குப் பின் சிறையிலிருந்து விடுதலையான 104 வயது முதியவர்.

36 ஆண்டுகளுக்குப் பின் மேற்கு வங்க சிறையிலிருந்து விடுதலையான 104 வயது முதியவரை பற்றி..

சிறை (கோப்புப்படம்)

Published On :


கொல்கத்தா: 36 ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்கு வங்க மாநிலத்தின் மல்டா சிறையிலிருந்து 104 வயது முதியவர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் மல்டா மாவட்டத்தை சேர்ந்த 104 வயதான ரசிகத் மொண்டல், கடந்த 1988 ஆம் ஆண்டு நிலத்தகராறில் தனது சகோதரரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இவருக்கு கடந்த 1992 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இதனைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட இவரை, 36 ஆண்டுகள் கழித்து கடந்த மாதம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தண்டனை காலத்தில் ஒரு முறை பிணையிலும் ஒரு முறை பரோலிலும் வெளியே வந்த இவர் பிணைக்காலம் முடிந்தவுடன் மீண்டும் சிறைக்கு சென்றார். மேலும் இதற்கு முந்தைய சந்தர்பங்களில் இவரது விடுதலை மனுவை செஷன்ஸ் மற்றும் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தனது 72 வது வயதில் சிறைக்கு சென்றவர், தற்போது 104 வயதில் முழுவதுமாக விடுதலையாகியுள்ளார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டப்பொழுது, தான் ஒரு நிரபராதி எனவும் சூழ்நிலை கைதியாக தண்டனையை அனுபவித்தாகவும், இனியுள்ள நாள்களை தனது வீட்டிலுள்ள சிறிய தோட்டத்தை பராமரிப்பதிலும் தனது குடும்பத்தினரோடு நேரம் செலவளிப்பதிலும் கழிக்கப்போவதாகக் கூறியுள்ளார்.

மேலும், இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ”மேற்கு வங்க மாநிலத்தின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 100 வயதுக்கும் மேற்பட்ட கைதிகளை கொண்ட மிகச் சில வழக்குகளில் இதுவும் ஒன்று” என்று தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.