டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சம்பல் செல்லும் ராகுல்: பாதுகாப்பு அதிகரிப்பு! போக்குவரத்து நெரிசல்!

ராகுல் காந்தி சம்பல் மாவட்டத்துக்குச் செல்வதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 5:17 am

DIN

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்துக்குச் செல்வதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி எம்பி இருவரும் சம்பல் செல்வதால், தில்லி - மீரட் விரைவுச் சாலையில் உள்ள காஸிபூர் எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் கடந்த நவம்பர் 19ஆம் தேதி மசூதியில் ஹரிஹர் கோவில் இருப்பதாக ஒரு மனுவைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் முதன்முதலில் ஆய்வு செய்யப்பட்டபோது சம்பலில் பதற்றம் நிலவியது.

மசூதிக்கு அருகே ஏராளமான மக்கள் கூடி, ஆய்வுக் குழு மீண்டும் பணியைத் தொடங்கியபோது கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். அப்போது பாதுகாப்புப் படை வீரர்களுடன் மோதலில் ஈடுபட்ட அவர்கள், வாகனங்களை எரித்தும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர். மேலும் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.