மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

இந்தூர் விடுதியில் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு!

மாணவி விடுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 10:46 am

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் இளங்கலைப் பட்டம் பயின்றுவந்த மாணவி விடுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குவாலியரில் வசிக்கும காஷிஷ் பத்வானி. இவர் இந்தூரில் இளங்கலைப் பட்டப்படிப்பு பயின்றுவந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விடுதியில் தங்கிப் படித்துவந்த அவர், குளியலறைக்கு வெளியே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

உடன் தங்கியிருந்த மாணவிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவம் நடந்த விடுதி லசுடியா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீஸார் விடுதிக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இறந்த பெண்ணின் பெற்றோர் குவாலியரில் வசிக்கின்றனர், அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உடலை பிரேதப் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பத்வானி நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்துவிட்டு தனியார் விடுதியில் வசித்து வந்தார்.

விசாரணையின் போது, பத்வானி மனமுடைந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக யாரிடமும் பேசாமல் இருந்ததாகவும், எந்த பிரச்னையையும் அவர் பகிர்ந்து கொள்ளவில்லை என்று விடுதி மாணவிகள் போலீஸாரிடம் தெரிவித்தனர். அவரது மொபைல் போனின் அழைப்பு பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மாணவி உயிரிழந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியவில்லை. போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.