உச்சநீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மன்மோகன் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகனின் பெயரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்துவதற்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த வாரம் பரிந்துரை செய்தது. பரிந்துரையின்பேரில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக மன்மோகனை நியமிப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
நீதிபதி மன்மோகன் மார்ச் 2008ல் தில்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் மற்றும் அதன் தலைமை நீதிபதியாக செப்டம்பர் 29 முதல் செயல்பட்டு வந்தார். நீதிபதி மன்மோகன் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஒருங்கிணைந்த அகில இந்திய சீனியாரிட்டியில் வரிசை எண் 2இல் உள்ளார்,
பெஞ்ச் பதவிக்கு உயர்த்தப்படுவதற்கு முன்பு, அவர் முதன்மையாக சிவில், குற்றவியல், அரசியலமைப்பு, வரிவிதிப்பு, நடுவர், சேவை வழக்குகளில் உச்ச நீதிமன்றம் மற்றும் தில்லி உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார். தில்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் மூத்த குழு வழக்குரைஞராகவும் பணியாற்றினார்.
கடந்த நவம்பர் 28 நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் ஆகியோரின் பெயர்கள் குறித்து ஆலோசித்து விவாதித்தது. நீதிபதி மன்மோகன் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்படுவார் என உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது.
நீதிபதி மன்மோகன் டிசம்பர் 17,1962-ல் தில்லியில் பிறந்தார். தில்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியில் வரலாறு மற்றும் தில்லி பல்கலைக்கழக வளாக சட்ட மையத்தில் பயின்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


