டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

விவசாயிகளுக்கு காயம்: தில்லி நோக்கிப் பேரணி முடிவை திரும்பப் பெற்றனர்

ஷம்புவிலிருந்து தில்லி நோக்கிப் பேரணியாகச் செல்லும் முடிவை திரும்பப் பெற்ற விவசாயிகள்.

News image
போராட்ட களத்தில் விவசாயிகள்- Shiva Sharma
Updated On :6 டிசம்பர் 2024, 10:41 am

DIN

குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற விவசாயிகள், தங்கள் முடிவை திரும்பப் பெற்றனர்.

பஞ்சாப் - ஹரியாணா மாநில எல்லைப் பகுதியிலிருந்து தில்லி நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டு வீசப்பட்டதாலும், ஹரியாணா காவல்துறையினர் ஏற்படுத்திய தடுப்புகளை அகற்ற முயன்ற விவசாயிகளுக்கும் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

சில விவசாயிகளுக்கு காயம் ஏற்பட்டிருப்பதால், இன்று நடத்தவிருந்த தில்லி நோக்கிப் பேரணியை திரும்பப் பெறுவதாக சர்வான் சிங் பாந்தெர் அறிவித்தார்.

ஹரியாணா காவல்துறையினர், விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதால், ஆறு விவசாயிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.எனவே, இன்று நடத்தவிருந்தபேரணியை திரும்பப் பெறுவதாகவும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா என்ற இரண்டு அமைப்புகளும் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து அறிவிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

ஹரியாணா - பஞ்சாப் எல்லையான ஷம்பு பகுதியில் விவசாயிகள் போராடி வந்த நிலையில் இன்று அங்கிருந்து தில்லி நோக்கி 101 விவசாயிகள் பேரணியாகச் செல்ல முயன்றனர்.

ஆனால், அவர்களை ஹரியாணா காவல்துறையினர் சில அடி தூரத்திலேயே தடுத்து நிறுத்தினர். விவசாயிகள் பேரணியைத் தடுக்க சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தினர். அதனையும் விவசாயிகள் அகற்றியிருந்தனர்.

போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் களைந்துசெல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.