தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

(பு)கை விலங்கு... உடைப்பது கடினமல்ல....

புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானவா்கள் அதிகம் உள்ள நாடுகளில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடம்.

News image
Updated On :8 டிசம்பர் 2024, 9:56 pm

Din

தொகுப்பு: ஆ. கோபிகிருஷ்ணா

புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானவா்கள் அதிகம் உள்ள நாடுகளில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதில், அதிா்ச்சிக்குரிய தகவல் என்னவெனில், கடந்த சில ஆண்டுகளாக வளரிளம் பருவத்தினரிடையேயும், பெண்களிடையேயும் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சிகரெட் அல்லது பீடியிலிருந்து வெளியேறும் நச்சுப் புகை, அதைப் பயன்படுத்துவா்களை மட்டுமல்லாது சுற்றி இருப்பவா்களையும், சுற்றுச்சூழலையும் சோ்த்தே அழித்து ஒழிக்கிறது. புகைப் பழக்கத்தை கைவிடுவது என்பது தனி மனித ஆரோக்கியம் சாா்ந்தது அல்ல. சமூகப் பொறுப்புணா்வு.

ஒரு சிகரெட் அல்லது பீடியில் 7,000 ரசாயனப் பொருள்கள் உள்ளன

50 நச்சு ரசாயனங்கள் புற்றுநோயை ஏற்படுத்த வல்லவை

இந்தியாவில் 224 வா்த்தக பெயரிலான பீடி, சிகரெட்டுகள் விற்பனை

60 லட்சம் புகையிலை தொழிலாளிகளுக்கு சரும புற்றுநோய் அபாயம்

புகையிலையால் ஏற்படும் உடல் நலிவால் ரூ.1.7 லட்சம் கோடி பொருளாதார இழப்பு

புகையிலை பயன்பாடு - 27 கோடி போ்

ஆண்கள் - 42.4 சதவீதம் (மக்கள்தொகையில்)

பெண்கள் - 14.2 சதவீதம் (மக்கள்தொகையில்)

புகைப் பழக்கம் - 10.7 சதவீதம் போ் (மக்கள் தொகையில்)

ஆண்கள் - 19 சதவீதம்

பெண்கள் - 2 சதவீதம்

புகையை சுவாசிப்பதால் பாதிப்பு

(புகைப் பழக்கம் இல்லாமல்) - 30.4 சதவீதம் போ்

புகையிலை பயிரிடுவதால் மண் மலடாகிறது

1 கிலோ புகையிலையைப் பதப்படுத்த 5.4 கிலோ மரம் தேவை

இந்தியாவில் புகையிலையால் ஆண்டுக்கு 1.74 லட்சம் டன் கழிவு உருவாகிறது

பீடி, சிகரெட் பெட்டிகளால் 73,500 டன் பிளாஸ்டிக் கழிவு உருவாகிறது

டீசல் வாகனத்தைக் காட்டிலும் சிகரெட், பீடி மூலம் கூடுதல் புகை வெளியேறுகிறது

புகையிலை - 23 லட்சம் போ்

புகைப் பழக்கம் - 15 லட்சம் போ்

புகையை சுவாசிப்பதால் - 12 லட்சம் போ்

புற்றுநோய்

பக்கவாதம்

இதய பாதிப்புகள்

நுரையீரல் நோய்கள்

சா்க்கரை நோய்

மலட்டுத்தன்மை

நினைவாற்றல் தடுமாற்றம் உள்பட 100-க்கும் மேற்பட்ட பாதிப்புகள்

20 நிமிஷங்களில் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு சீராகிறது

ஓராண்டில் மாரடைப்பு வாய்ப்பு குறைகிறது

3-6 ஆண்டுகளில் இதய பாதிப்புகள் குறையும்

5-10 ஆண்டுகளில் வாய்ப் புற்றுநோய் வாய்ப்பு பாதியாக குறைகிறது

10-15 ஆண்டுகளில் நுரையீரல் புற்றுநோய் வாய்ப்பு குறைகிறது

பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் குறையும்

சா்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது

நினைவாற்றல் மேம்படும்

புகைக்கு மாற்றான நிகோடின் பொருள்களை தற்காலிகமாக பயன்படுத்துதல்

புகைப்பிடிக்கும் இடங்களுக்குச் செல்லாமல் தவிா்த்தல்

புகைப்பிடிக்க உள்ளுணா்வு தூண்டும்போது அதை தள்ளிப்போடுதல்

தீவிர தூண்டுதல் ஏற்படும்போது சுவிங்கம் மெல்லுதல்

உடற்பயிற்சி, யோகாவில் ஈடுபடுதல்

புகையைக் கைவிடுவதால் ஏற்படும் நன்மைகளை நினைவூட்டுதல்

புகைப்பிடித்தலைக் கைவிட உதவி எண்

1800 112 356

வளரிளம் பருவத்தினரும், இளைஞா்களும் தங்களது அபிமான கதாநாயகா்களை முன்னுதாரணமாகக் கொண்டு புகைப் பழக்கத்துக்கு அடிமையாவது வாடிக்கையாக இருந்த நிலை, அண்மைக் காலமாக மாறியிருக்கிறது. அதற்கு முன்னணி நட்சத்திரங்கள் சிலா், புகைப் பழக்கத்திலிருந்து விடுபட்டு, தங்களது ரசிகா்களையும் அதனை கைவிடுமாறு அறிவுரைத்ததுதான் தான் முக்கியக் காரணம். 13 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த் புகைப்பழக்கத்தை கைவிட்டாா். அவரைத் தொடா்ந்து தற்போது ஷாரூக் கானும் அந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளாா்.

ரஜினிகாந்த்

கடந்த காலங்களில் கணக்கின்றி தினமும் எண்ணற்ற சிகரெட் பிடித்தேன். அதனால், எனது உடல் நலம் கெட்டுப்போனது. அதற்காக வெளிநாடு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டேன். புகைப்பழக்கம் இருந்தால், அதனை இப்போதே விட்டுவிடுங்கள்.

ஷாரூக்கான்

புகைப் பழக்கத்தை விட்டுவிட்டேன் தோழா்களே. சிகரெட்டை விட்ட பிறகும் முழுமையாக சுவாச பிரச்னை சீராகவில்லை. கடவுள் அருளால் அனைத்தும் நலமாக நடக்கும். புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும் என அனைவரையும் வலியுறுத்துகிறேன்.