
காங்கிரஸ் தலைமையின்கீழ் இந்தியா கூட்டணி தோல்வி அடைந்துள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி விமர்சித்துள்ளார்.
இதனால் இந்தியா கூட்டணிக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனதுடன் கல்யாண் பானர்ஜி பேசியதாவது,
’’தங்கள் தலைமையில் இந்தியா கூட்டணி தோல்வி அடைந்துள்ளதை காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொள்ள புரிந்துகொள்ள வேண்டும். இதனை சமீபகாலமாகவே கூறிவருகிறோம். இந்தியா கூட்டணிக்கு மமதா பானர்ஜி பதவியேற்பது கூட்டணி நலனுக்கு சாதகமாக அமையும். தலைமை பொறுப்பேற்க மற்ற தலைவர்களைக் காட்டிலும் மமதா பானர்ஜியின் பெயர் முதன்மை இடத்தில் உள்ளது’’ எனக் குறிப்பிட்டார்.
இந்தியா கூட்டணிக்கு முதல்வர் மமதா பானர்ஜி தலைமையேற்க வேண்டும் என பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, ’’இந்தியா கூட்டணிக்கு மமதா பானர்ஜி தலைமை பொறுப்பேற்க வேண்டும். இதில் காங்கிரஸ் ஆட்சேபனை அர்த்தமற்றது. மமதா தலைமையேற்றால் 2025-ல் மீண்டும் அரசாங்கத்தை அமைப்போம்’’ எனக் கூறினார்.
இதனால் இந்தியா கூட்டணி கட்சியினரிடையே தலைமை குறித்து விவாதம் எழுந்துள்ளது.
லாலு பிரசாத் யாதவின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலவையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | இந்தியா கூட்டணியை வலுப்படுத்த விரும்பினால்.. சஞ்சய் ரெளத் கருத்து!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.