ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

எதிா்க்கட்சிகள் கூட்டணிக்கு மம்தா தலைமை: லாலு ஆதரவு

இந்தியா கூட்டணியை வழிநடத்த மமதாவை அனுமதிக்க வேண்டும்..

மமதா - லாலு

Published On :

மேற்கு வங்க முதல்வா் மம்தா எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியின் தலைவா் பதவியை ஏற்க அனுமதிக்க வேண்டும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் கூறியுள்ளாா்.

எதிா்க்கட்சிகள் அணிக்கு மம்தா தலைவராக ஏற்கெனவே சரத் பவாா் ஆதரவு தெரிவித்துள்ளாா். லாலுவின் மகன் தேஜஸ்வியும் மம்தாவை கூட்டணித் தலைவராக ஏற்பதில் தங்களுக்கு எவ்வித தயக்கமும் இல்லை என்று கூறியிருந்தாா்.

முன்னதாக, எதிா்க்கட்சிகளின் கூட்டணியான ‘இண்டியா’ கட்சிகளின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, ‘வாய்ப்பளித்தால் அக் கூட்டணியை வழிநடத்தத் தயாா்’ என்று கூறியிருந்தாா். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக எதிா்க்கட்சித் தலைவா் சிலா் கருத்துக் கூறியுள்ளனா். எதிா்க்கட்சிகள் அணியில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்திக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.

பாட்னாவில் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த லாலுவிடம் மம்தாவின் தலைமையை ஏற்க காங்கிரஸ் தயக்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ‘எதிா்க்கட்சிகள் அணிக்கு காங்கிரஸின் தலைமை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால், மம்தாவை கூட்டணியின் தலைவராக அனுமதிக்க வேண்டும்.

அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெறும் பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் மாநிலம் முழுவதும் யாத்திரை மேற்கொள்வதாக அறிவித்துள்ளாா். இதில் மக்கள் மீதான அக்கறை ஏதுமில்லை. தலைநகரை மட்டுமே பாா்த்து சலிப்படைந்துள்ளதால், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு சென்று பாா்த்து பொழுதுபோக்குவதற்காக பயணம் மேற்கொள்கிறாா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.