நாடாளுமன்றத்தில் வீணாகும் ஒவ்வொரு நிமிடமும் மக்களின் பணம்!!
நாடாளுமன்றத்தில் வீணாகும் ஒவ்வொரு நிமிடமும் ரூ. 2.5 லட்சம் செலவழிக்கப்படுவதாகத் தகவல்

கோப்புப் படம்

கோப்புப் படம்
மக்களவையில் இரண்டு பில்லியனர்கள் குறித்த பிரச்னைகள் மட்டுமே விவாதிக்கப்படுவதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
பில்லியனர்கள் கௌதம் அதானி, ஜார்ஜ் சொரோஸ் இருவர் குறித்த பிரச்னைகள் மட்டுமே மக்களவையில் விவாதிக்கப்படுவதன் மூலம், நாட்டின் பிற பிரச்னைகள் கண்டுகொள்ளாமல் கிடப்பில் இருப்பதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலரும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
அதானி லஞ்சக் குற்றச்சாட்டுகள் வழக்கு குறித்து அமெரிக்காவில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரி வருகின்றனர். இருப்பினும், காங்கிரஸின் அதானி எதிர்ப்பு போராட்டங்களிலிருந்து சமாஜவாதி கட்சி, திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் சொரெஸ் விவகாரத்திலோ, அதானி விவகாரத்திலோ உடன்பாடு இல்லை என்று கூறி, விலகிக் கொண்டன. இந்த நிலையில், ஆட்சி மாற்றங்களுக்கு நிதியளித்ததாகக் கூறப்படும் பில்லியனர் ஜார்ஜ் சொரோஸின் அமைப்புடன் காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக பாஜகவும் பதிலுக்கு குற்றம் சாட்டி வருகிறது.
இவ்விரு பிரச்னைகளை மட்டுமே விவாதிப்பதால் நாடாளுமன்றத்தில் நேரம்தான் செலவாகிறது. மக்களின் வரிப்பணத்தில்தான் நாடாளுமன்றம் செயல்படுகிறது; ஆனால், நாடாளுமன்றத்தின் இந்தப் போக்கால், மக்கள்தான் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.
இதையும் படிக்க: மக்களவைத் தலைவரைச் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி! ஏன்?
2012 ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்தை சீர்குலைப்பதற்கான செலவு நிமிடத்திற்கு ரூ. 2.5 லட்சம் என்று அப்போதைய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பவன் பன்சால் கூறினார். 2021 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட முடக்கம், வரி செலுத்துவோருக்கு சுமார் ரூ. 133 கோடி செலவாகும் என்று ஓர் அறிக்கையில் கூறுகிறது.
இருப்பினும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுவதாவது, ``அவை நடவடிக்கைகள் செயல்பட வேண்டும், அவையில் விவாதம் நடக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. அதானி விவகாரத்தில் டிசம்பர் 13-ஆம் தேதி விவாதம் நடத்தப்பட வேண்டும். இந்த விவாதத்தை அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் மறுத்து வருகிறார்கள். ஆனால், நாங்கள் கடைசிவரை இதை விடமாட்டோம். இதற்காக அவர்கள் எங்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்துவார்கள். எனினும் விவாதம் வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...