செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை டிச.16-க்கு ஒத்திவைப்பு!

சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு திங்கள் கிழமை காலை 11 மணிக்கு மாநிலங்களவைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image

மாநிலங்களவை ஒத்திவைப்பு

Updated On :13 டிசம்பர் 2024, 12:49 pm IST

மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு எதிரான தீா்மான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில் மாநிலங்களவை டிசம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜாா்ஜ் சோரஸுக்கும், சோனியா குடும்பத்துக்கும் தொடா்புள்ளதாக, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பாஜக தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. அதேநேரம், மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் பாரபட்சத்துடன் செயல்படுவதாகவும், ஆளும்தரப்பின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க எதிா்க்கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என்றும் குற்றஞ்சாட்டி, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவர எதிா்க்கட்சிகள் சில தினங்களுக்கு முன் நோட்டீஸ் அளித்தன.

இவ்விரு விவகாரங்களும் நாடாளுமன்றத்தில் தொடா்ந்து எதிரொலித்து வருகிறது. இந்தச் சூழலில், மாநிலங்களவை வெள்ளிக்கிழமை கூடியதும் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனா்.

இதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு திங்கள் கிழமை காலை 11 மணிக்கு மாநிலங்களவைத் தொடங்கும் என அவைத்தலைவர் ஜகதீப் தன்கர் உத்தரவிட்டார். 

டிசம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதற்கு முன்பு, அவையில் கார்கே மற்றும் அவைத் தலைவர் ஜேபி நட்டா இருவரையும் அவைத்தலைவர் அறையில் தன்னைப் பார்க்குமாறு தன்கர் கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.