மகாராஷ்டிரத்தில் அமைச்சரவை விரிவாக்கம்!
மகாராஷ்டிரத்தில் மகாயுதி கூட்டணியின் அமைச்சரவை விரிவாக்கம் இன்று (டிச. 15) நடைபெற்றது. இதில் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
நாக்பூரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், சிவசேனைக் கட்சியின் (ஷிண்டே பிரிவு) ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (அஜீத் பிரிவு) தலைவர் அஜீத் பவார் உள்ளிட்ட மகாயுதி கூட்டணி தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் பங்கேற்றார்.
இதில், மகாயுதி கூட்டணியைச் சேர்ந்த அமைச்சர்கள் சஞ்சய் ரத்தோட், உதய் சமந்த், ஜெயக்குமார் ராவல், சந்திரகாந்த் பாட்டீல், அசோக் உய்க், ராதாகிருஷ்ணா விகே பாட்டீல், குலாப்ராவ் பாட்டீல், கணேஷ் ராமச்சந்திர நாயக் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
மேலும், அதுல் சவே, தாதாஜி புசே, பவன்குலே, பங்கஜா முண்டே, தனஞ்செய் முண்டே, மங்கல் பிரபாத் லோதா ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
மகாயுதி கூட்டணி சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 19 அமைச்சரவையும், அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு 11, ஷிண்டே தலைமையிலான சிவசேனைக்கு 9 இடங்களும் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 5ஆம் தேதி மகாராஷ்டிரத்தின் முதல்வராஜ தேவேந்திர ஃபட்னவீஸ் பதவியேற்ற நிலையில், 10 நாள்கள் கழித்து அமைச்சரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... ஒரு அயோத்தி போதாதா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.