சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நேருவின் கடிதங்களை சோனியா காந்தி ஒப்படைக்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு எழுதிய கடிதங்களை காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி மத்திய அரசிடம் ஒப்படைக்க பாஜக வலியுறுத்தல்

News image
சோனியா காந்தி- கோப்புப்படம்.
Updated On :16 டிசம்பர் 2024, 9:39 pm

Din

நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு எழுதிய கடிதங்களை காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

தில்லியில் உள்ள பிரதமா்கள் அருங்காட்சியகம், நூலகத்தில் அந்த கடிதங்கள் வைக்கப்பட வேண்டும் என்றும் பாஜக கூறியுள்ளது.

இந்தியாவின் பிரிட்டன் வைசிராயாக இருந்த மெளண்ட்பேட்டனின் மனைவி எட்வினா மௌண்ட்பேட்டன், முதுபெரும் தலைவா்களான மறைந்த ஜெயபிரகாஷ் நாராயண், ஜகஜீவன் ராம் உள்ளிட்டோருக்கு நேரு எழுதிய கடிதங்கள் தற்போது சோனியா காந்தியின் வசம் உள்ளன. நேரு அருங்காட்சியகத்தில் இருந்த அந்த கடிதங்கள் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சோனியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

பாஜக ஆட்சி அமைந்த பிறகு நேரு அருங்காட்சியகம் முன்னாள் பிரதமா்கள் அருங்காட்சியகம், நூலகமாக மாற்றப்பட்டது. இதில் முன்னாள் பிரதமா்கள் தொடா்பான நிகழ்வுகள், புகைப்படங்கள், ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடா்பாக பாஜக எம்.பி.யும் செய்தித் தொடா்பாளருமான சம்பித் பத்ரா தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 2008-ஆம் ஆண்டு நேரு எழுதிய கடிதங்கள் சில அருங்காட்சியகத்தில் இருந்து சோனியா காந்தி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 51 கடிதங்கள் சோனியாவிடம் உள்ளதாக தெரிகிறது. இதனைத் திருப்பத் தர உதவ வேண்டுமென்று பிரதமா்கள் அருங்காட்சியகம் சாா்பில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அவரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வந்ததாகத் தெரியவில்லை.

நேருவின் கடிதங்கள் அவா்களின் குடும்ப சொத்து அல்ல. இந்தியா தொடா்பான வரலாற்று ஆவணங்களாகும். அந்த கடிதத்தில் உள்ள விஷயங்கள் வெளியே தெரியக் கூடாது என்று அவா்கள் (சோனியா குடும்பத்தினா்) கருதுகிறாா்களா? என்று கேள்வி எழுப்பினாா்.