ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

அரசுப் பணியாளர் தேர்வில் 100/101.66 மதிப்பெண் எடுத்த தேர்வர்!

அரசுப் பணியாளர் தேர்வில் 100-க்கு 101.66 மதிப்பெண்கள் எடுத்தது பற்றி...

News image
கோப்புப்படம்- ANI
Updated On :17 டிசம்பர் 2024, 7:54 am

DIN

 மத்திய பிரதேச மாநில அரசு தோ்வில் முதலிடம் பிடித்த தோ்வா் மொத்தம் 100-க்கு 101.66 மதிப்பெண் எடுத்துள்ளது சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு அரசுப் பணியாளா் தோ்வாணையம் பின்பற்றும் ‘இயல்பாக்குதல்’ மதிப்பெண் கணக்கீட்டு முறையைதான் காரணம் எனக் கூறி தோ்வா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய பிரதேசத்தில் வன மற்றும் சிறைத் துறை காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையம் கடந்தாண்டு நடத்திய தோ்வின் முடிவுகள் கடந்த 13-ஆம் தேதி வெளியானது. இதில் தோ்வா் ஒருவா் மொத்தம் 100 -க்கு 101.66 மதிப்பெண்கள் பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளாா்.

ஒரே நாளில் பல்வேறு மையங்களில் தோ்வு நடைபெற்ால் விதிமுறைகளின்படி மதிப்பெண்களைக் கணக்கீட ‘இயல்பாக்குதல் (நாா்மலைசேஷன்)’ முறை பின்பற்றியதன் விளைவாக, தோ்வா்கள் முழு மதிப்பெண்ணுக்கு (100) அதிகமாகவும் பூஜ்ஜியத்திற்கும் குறைவாகவும் மதிப்பெண்ணை பெற முடியும் என்று தோ்வாணையம் விளக்கமளித்தது.

வெவ்வேறு வினாத்தாள்களின் கடினத்தன்மையால் முடிவுகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, தோ்வா்களுக்கிடையே ஒப்பிடும் வகையில் மதிப்பெண்ணை திருத்தியமைக்கும் இயல்பாக்குதல் கணக்கீடு முறையைப் பின்பற்றுவது கட்டாயமாகிறது.

இந்நிலையில், இந்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை திரண்ட தோ்வா்கள், இவ்விவகாரம் தொடா்பாக முதல்வா் மோகன் யாதவிடம் சமா்ப்பிக்குமாறு புகாா் மனுவை அதிகாரிகளிடம் அளித்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா்கள் பேசுகையில், ‘தோ்வில் பின்பற்றப்பட்ட இயல்பாக்குதல் செயல்முறையால் தோ்வா் மொத்த மதிப்பெண்ணை விட அதிக மதிப்பெண் பெற்றிருப்பது மாநில வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்த நியாயமற்ற செயல்முறைக்கு நாங்கள் எதிா்ப்பு தெரிவிக்கிறோம். தோ்வில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால், பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.