பாஜக எம்.பி.க்கள் தள்ளியதால் முழங்காலில் காயம்: கார்கே புகார்!

பாஜக எம்.பி.க்கள் தள்ளியதால் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக மக்களவைத் தலைவருக்கு மல்லிகார்ஜுன கார்கே புகார் கடிதம்.
பாஜக எம்.பி.க்கள் தள்ளியதால் முழங்காலில் காயம்: கார்கே புகார்!
Published on
Updated on
1 min read

பாஜக எம்.பி.க்கள் தள்ளியதால் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புகார் கடிதம் அளித்துள்ளார்.

மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை பேசிய அமித் ஷா, அம்பேத்கர் குறித்து தரக்குறைவாக பேசியதாக அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, இவ்வளவு முறை கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்' என்று கூறியிருந்தார்.

அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமித் ஷாவை கண்டித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நாடாளுமன்ற நுழைவு வாயிலில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்ததில் தலையில் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட சக உறுப்பினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராகுல் காந்தி தள்ளிய ஒரு எம்பி தன் மீது விழுந்ததால் தனக்கு காயம் ஏற்பட்டதாக பிரதார் சந்திர சாரங்கி தெரிவித்தார். இதையடுத்து பாஜக எம்.பி.க்கள், ராகுல் காந்தி மீது குற்றம்சாட்டி வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு தெரிவித்தார்.

இந்நிலையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில், 'இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று காலை பேரணியில் ஈடுபட்டபோது பாஜக எம்.பி.க்களால் நான் தள்ளப்பட்டேன். இதனால் நாள் நிலைகுலைந்து தரையில் உட்கார வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். இதனால் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்திருக்கும் எனது முழங்கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் காங்கிரஸ் எம்.பி.க்கள் கொண்டு வந்த நாற்காலியில் அமர்ந்தேன். மிகுந்த சிரமத்துடன் சக எம்பிக்களின் உதவியுடன் காலை 11 மணிக்கு நான் எனது இல்லத்திற்கு திரும்பினேன்.

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இதுகுறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com