மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் நியமனம்!

தேசிய மனித உரிமை ஆணையத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் நியமனம்.

ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் - கோப்புப் படம்

Published On :23 டிசம்பர் 2024, 6:29 pm IST

தேசிய மனித உரிமை ஆணையத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி ராம சுப்பிரமணியனை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று (டிச. 23) உத்தரவிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற டி.ஒய்.சந்திரசூட், தேசிய மனித உரிமை ஆணையத் தலைவராக பொறுப்பேற்பார் எனக் கூறப்பட்டுவந்த நிலையில், ராம சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹிமாசலப் பிரதேசத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் ராமசுப்பிரமணியன் பணியாற்றியுள்ளார்.

முன்னதாக சென்னை மற்றும் தெலங்கானா உயர்நீதிமன்றங்களிலும் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

நீதிபதி ராமசுப்பிரமணியன் யார்?

தமிழ்நாட்டில் உள்ள மன்னார்குடியில் பிறந்த ராமசுப்பிரமணியன், இந்து உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தவர். விவேகானந்தா கல்லுாரியில் இளம் அறிவியல் பட்டம் பெற்றவர்; சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று 1983-ல் பட்டம் பெற்றவர்.

2006 முதல் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2009 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகவும் பணியாற்றியவர்.

2016 முதல் தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி அனுபவம் கொண்ட இவர், 2019 ஜூன் முதல் ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் இருந்துள்ளார். 2019 செப்டம்பர் முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.