சென்னை: தீ ஆணையத் தலைவராக இருந்த தமிழக காவல் துறையின் முன்னாள் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் இன்று தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
தீ ஆணையம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதிதாக உருவாக்கப்பட்டு அதன் முதல் தலைவராக முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டிருந்தார்.
தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக (டிஜிபி) இருந்த சங்கா் ஜிவால் பணி ஓய்வுபெற்ற, உடனடியாக அவருக்கு தீ ஆணையத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று தீ ஆணையத் தலைவர் பதவியை அவர் ராஜிநாமா செய்திருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சங்கா் ஜிவால் உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா். பொறியாளரான இவா், ஐபிஎஸ் தோ்வில் தோ்ச்சி பெற்று, கடந்த 1990-ஆம் ஆண்டு தமிழக காவல்துறை பணியில் சோ்ந்தவர். மன்னாா்குடி உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியைத் தொடங்கிய சங்கா் ஜிவால் டிஜிபியாக பணி ஓய்வு பெற்று, தீ ஆணையத் தலைவராக பதவியேற்றிருந்த நிலையில் 9 மாதங்களுக்குள் ராஜிநாமா செய்திருக்கிறார்.
தீயணைப்புத் துறை ஆணையத்தின் உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, நமச்சிவாயம், இக்ராம் ஆகியோரும் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர்.
Summary
Shankar Jiwal resigned from the post of Fire Services Commission Chairman!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!
எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தது ஏன்? 4 பேருக்கும் பேரவைத் தலைவர் நோட்டீஸ்!





