கோப்புப்படம்
இந்தியா
மன்மோகனுக்கு இரங்கல்: நாளை கூடுகிறது தெலங்கானா பேரவை
மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக, தெலங்கானா சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை (டிச. 30) நடைபெறவுள்ளது.
கடந்த 2014-இல் ஒருங்கிணைந்த ஆந்திரத்தில் இருந்து தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டதில் மன்மோகன் சிங் ஆற்றிய பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது; அன்று நாள்முழுக்க கூட்டம் நடைபெறும் என்று மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மன்மோகன் சிங் தலைமையிலான இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.