சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

குஜராத்தில் மீண்டும் நிலநடுக்கம்!

குஜராத் மாநிலத்தில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

News image
குஜராத்தில் நிலநடுக்கம்
Updated On :29 டிசம்பர் 2024, 7:03 am

DIN

குஜராத் மாநிலத்தின் கட்சி மாவட்டத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை 10.07 மணியளவில் பச்சாவ் நகரின் வடகிழக்குப் பகுதிக்கு 18 கி.மீ தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று கட்ச் மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இது கட்ச் மாவட்டத்தில் இந்த மாதம் ஏற்பட்ட 3 வது நிலநடுக்கமாகும்.

இதற்கு முன்னர், டிச. 7 அன்று 3.2 ரிக்டர் அளவிலும், டிச. 23 அன்று 3.7 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது.

கடந்த நவம்பர் 15 அன்று குஜராத்தின் பதான் நகரில் 4.2 ரிக்டர் அளவிலும், நவம்பர் 18 அன்று கட்ச் மாவட்டத்தில் 4 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

குஜராத் நிலநடுக்க அபாயம் அதிகமுள்ள பகுதியாகும். கடந்த 200 ஆண்டுகளில் 9 பெரிய நிலநடுக்கங்களை குஜராத் சந்தித்துள்ளளது.

கட்ச் மாவட்டத்தில் 2001 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 13,800 பேர் பலியாகினர். மேலும், 1.67 லட்சம் பேர் காயமடைந்தனர். இது நாட்டில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய இரண்டாவது பெரிய நிலநடுக்கமாக கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.