12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம்!

குஜாராத் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதைப் பற்றி..

கோப்புப்படம்

Published On :

குஜராத் மாநிலம் கச்சு மாவட்டத்தில் இன்று காலை 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுள்ளது.

குஜராத்தின் காந்தி நகரைச் சார்ந்த நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் கச்சு மாவட்டத்தின் லக்பட் நகரத்திற்கு வடக்கு-வட கிழக்கிலிருந்து 76 கி.மீ தொலைவில் மையமாக கொண்டு இன்று (டிச.23) காலை 10.44 மணியளவில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நில அதிர்வினால் எந்தவொரு உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த டிச.7 அன்று இதே கச்சு மாவட்டத்தில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது.

நிலநடுக்க அபாயமுள்ள பகுதியான குஜராத் மாநிலத்தில் கடந்த 200 ஆண்டுகளில் 9 பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு கச்சு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 13,800 பேர் பலியான நிலையில் 1.67 லட்சம் பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.