கடனை திருப்பிச் செலுத்த பெண்ணை துன்புறுத்திய 4 பேர் மீது வழக்குப்பதிவு

கடனை திருப்பி செலுத்துவது தொடர்பாக பெண்ணை துன்புறுத்தியதாக 4 பேர் மீது தானே காவல் துறையினர் இன்று வழக்கு பதிவு செய்துள்ளார்.
கடனை திருப்பிச் செலுத்த பெண்ணை துன்புறுத்திய 4 பேர் மீது வழக்குப்பதிவு

தானே: கடனை திருப்பி செலுத்துவது தொடர்பாக பெண்ணை துன்புறுத்தியதாக 4 பேர் மீது தானே காவல் துறையினர் இன்று வழக்கு பதிவு செய்துள்ளார்.

43 வயதான பெண் தனது குடிநீர் விநியோக வணிகத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரிடமிருந்து ரூ.2.49 லட்சம் கடன் வாங்கியதாகவும், பிறகு அவர்கள் அசல் மற்றும் வட்டி உள்பட ரூ.12 லட்சத்தை திருப்பிச் செலுத்தக் கோரியதாகவும் கசர்வடவலி காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவரது புகாரின்படி, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் அக்டோபர் 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரை அந்த பெண்ணை துன்புறுத்தியுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பெண், கடன் பெற்ற பெண்னை தாக்கி, அவரது வாகனத்தையும் பறிமுதல் செய்யதுள்ளனர்.

மகாராஷ்டிர கடன் (ஒழுங்குமுறை) சட்டம் 2014 இன் கீழ் ஜனவரி 30ம் தேதியன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இது வரையிலும் யாரும் கைது செய்யப்படவில்லை என்பகு குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com