உத்தரகண்ட் ரோந்துப் பணியில் அதிநவீன வாகனம்! 

உத்தரகண்ட் ஹரித்வார் பகுதியில் காவல்துறையினர் அதிநவீன இரு சக்கர வாகனங்கள் மூலம் ரோந்துப் பணி மேற்கொள்கின்றனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தரகண்ட் ஹரித்வார் பகுதியில் காவல்துறையினர் ரோந்துப்பணிகளை மேற்கொள்ள அதிநவீன சுயசமநிலை ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு சுயசமநிலை ஸ்கூட்டர்கள் பயன்பாட்டை காவல்துறை தலைமை இயக்குனர் அபினவ் குமார் கொடியசைத்து துவங்கி வைத்தார். 

சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த நவீன இருசக்கர ஸ்கூட்டர்கள் மூலம் காவல்துறையினர் ரோந்துப்பணிகளை மேற்கொள்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. 

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இந்த நான்கு மின்சார ஸ்கூட்டர்களை உத்கர்ஷ் சிறிய நிதி வங்கி நன்கொடையாக வழங்கியுள்ளது. காவல்துறையினர் குறுகிய தெருக்கள், நடைபாதைகள், கங்கை மலைத்தொடர் பகுதிகள், கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த புதிய ஸ்கூட்டர்கள் உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த புதியவகை ஸ்கூட்டர்களைக் கையாள 8 காவல்துறை அதிகார்கள் பயிற்சி பெற்றிருப்பதாகவும் இந்த புதிய ரோந்துப்பணிகளை மேலும் பல இடங்களில் அமல்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com