இரவு பகலாக எருமை மாடுகளைப் பராமரிக்கிறோம்!: காவல்துறையினர்

மத்தியப் பிரதேசத்தில் கடத்தப்பட்ட எருமை மாடுகளை மீட்ட காவல்துறையினர், நாள் ஒன்றுக்கு ரூ.5,000 செலவழித்து பராமரித்துவருவதாகத் தெரிவித்துள்ளனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்தியப் பிரதேசத்தில் காண்ட்வா மாவட்டக் காவல்துறையினர் 17 எருமை மாடுகளை தினமும் 5000 ரூபாய் வரை செலவழித்து பார்த்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். 

'மொத்தம் 17 எருமை மாடுகள் உள்ளன. அவற்றுக்கு உணவுக்காக மட்டுமே 4,000 முதல் 5,000 வரை செலவாகிறது' என ஜவார் காவல்நிலையப் பொறுப்பாளர் ஜே பி வெர்மா தெரிவித்துள்ளார். 

'ஐந்து நாள்களுக்கு முன்னர் இந்த எருமை மாடுகள், சட்டத்திற்கு புறம்பாக கடத்தப்பட்டபோது காவல்துறையினரால் மீட்கப்பட்டன. இப்போது இவற்றைப் பார்த்துக்கொள்வதற்காக 5000 ரூபாய் வரை தினமும் செலவாகிறது' என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

நீதிமன்றம் அனுமதி அளித்த பின்னர் இந்த மாடுகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

'ஆகும் செலவுகளையெல்லாம் நான்தான் பார்த்துக்கொள்கிறேன். காவல்துறை அதிகாரிகள் இந்த எருமைமாடுகளை இரவு பகலாக பார்த்துக்கொள்கிறார்கள்' எனவும் அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com