குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுகிறேன்: ஹேமந்த் சோரன்
ஜாா்க்கண்ட் பேரவையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உரையாற்றினார்.


ஜாா்க்கண்ட் பேரவையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உரையாற்றினார்.
ஜாா்க்கண்ட் சட்டப்பேரவையில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கூட்டணிக்கும் இருக்கும் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முதல்வர் சம்பயி சோரன் இன்று தாக்கல் செய்தார்.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் பேரவைக்கு வந்த சோரன் உரையாற்றினார்.
ஹேமந்த் சோரன் பேசியது:
“நான் 8.5 ஏக்கர் நில மோசடி வழக்கில் தற்போது கைதாகியுள்ளேன். இந்த குற்றச்சாட்டு உண்மை என்றால் ஆதாரத்தை காட்டுங்கள். குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் நான் அரசியலில் இருந்து விலகுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
நில மோசடியுடன் சம்பந்தப்பட்ட சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் ஜாா்க்கண்ட் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) தலைவருமான ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, தனது முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜிநாமா செய்த நிலையில், ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவரான சம்பயி, மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து, 47 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரினாா்.
தொடர்ந்து, ஜாா்க்கண்ட் முதல்வராக சம்பயி சோரனும், இரு அமைச்சர்களும் கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...