கான்பூரில் சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் கார் கட்டுப்பாட்டை இழந்து வடிகாலில் விழுந்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.


உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் கார் கட்டுப்பாட்டை இழந்து வடிகாலில் விழுந்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் உள்ள ஜகன்னாத்பூர் கிராமத்திற்கு அருகே, மத்தியப் பிரதேசத்திலிருந்து நிச்சயதார்த்த விழாவை முடித்துவிட்டுத் திரும்பும்போது, அதிகாலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
விபத்துக்குள்ளான வாகனத்தில் பயணித்த 8 பேரில் விராட் (15) மற்றும் வைஷ்ணவி (19) ஆகியோர் காவல்துறையினரால் காப்பாற்றப்பட்டனர் என்று காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
விபத்தில் பலியானர்கள் விகாஸ் (40), அவரது மூத்த சகோதரர் சஞ்சு (45), குஷ்பு (17), கோலு (16), பிராச்சி (12), பிரதீக் (10) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிக்கந்திரா சமூக சுகாதார மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...