ஹைதராபாத்: நாட்டின் முதல் கல்வெட்டியல் அருங்காட்சியகத்துக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.
மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, சாலார் ஜங் அருங்காட்சியகத்தில் இதற்கான அடிக்கல்லை நாட்டினார்.
பாரத் பகிர்மான கல்வெட்டு களஞ்சியத் திட்டத்தை மத்திய அரசு 2023-ல் அறிவித்தது. இந்த திட்டத்தின்கீழ் டிஜிட்டல் முறையில் ஒரு லட்சம் கல்வெட்டுகள் மாற்றப்பட்டு அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இந்திய தொல்லியல்துறையால் நிர்வகிக்கப்படும் இந்த அருங்காட்சியகத்தில் கல்வெட்டுகளின் எழுத்து, உரை மற்றும் மொழி ஆகியவை பல்வகை ஊடகங்கள் மூலமாக காட்சிப்படுத்தப்படும்.
இது குறித்து கிஷன் ரெட்டி தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “நாட்டின் முதல் கல்வெட்டியல் அருங்காட்சியகம் ஹைதராபாத்தில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது”
இதையும் படிக்க: உங்களுக்கு எதிர்க்கட்சி வரிசைதான் இனி எப்போதுமே! பிரதமர் மோடி
மேலும் அவர், “புதிய அருங்காட்சியகம் திறப்பதற்கான முதல் படி மட்டுமல்ல இது, நமது தேசத்தின் கதையைச் சொல்லும் கல்வெட்டுகளின் விலைமதிப்பற்ற பாரம்பரியத்தையும் அவற்றை பாதுகாத்தல் மற்றும் காட்சிப்படுத்தல் ஆகியவை நோக்கிய முன்னேற்றத்திற்கான தொடக்கமும்தான்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பப்பு யாதவ் எம்.பி.யின் இல்லத்தில் கைகலப்பு: தில்லி காவல் துறையினா் வழக்குப்பதிவு

விவசாயிக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது
கஞ்சா விற்பனை 2 போ் கைது
திருட்டு வழக்கில் 3 போ் கைது
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


