ஜார்க்கண்ட்டில் தொடரும் காங்கிரஸ் நடைப்பயணம்!

ராகுல் காந்தி தலைமையிலான நடைப்பயணம் ஜார்க்கண்ட்டில் இன்று காலை துவங்கியது. 
பிர்சா முண்டா சிலைக்கு மரியாதை செலுத்தும் ராகுல் காந்தி | PTI
பிர்சா முண்டா சிலைக்கு மரியாதை செலுத்தும் ராகுல் காந்தி | PTI

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் ஜார்க்கண்ட்டில் உள்ள குண்ட்டி மாவட்டத்தில் செவ்வாய் கிழமை காலை மீண்டும் துவங்கியது.

அங்கு பிர்சா முண்டா சிலைக்கு மரியாதை செலுத்திய ராகுல் காந்தி தன் நடைப்பயணத்தைத்  துவங்கினார். கம்தாரா பேருந்து நிலையத்தை நோக்கி இந்தப் பயணம் செல்கிறது.

காங்கிரஸின் அறிக்கையின்படி, கும்லாவில் உள்ள பாசியாவில் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிய உணவு இடைவேளிக்குப் பின்னர் ஜுகன் சிங் சவ்க் பேருந்து நிலையத்தை நோக்கி நடைப்பயணம் தொடர்கிறது. அங்கு பொதுப்பேரணியில் ராகுல் பங்கேற்கவுள்ளார். 

அதன்பின்னர் காங்கிரஸ் நடைப்பயணம் ஒடிசாவிற்குள் நுழைகிறது. கொடியை ஒப்படைக்கும் நிகழ்வு மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் நடைபெறவுள்ளது. 

கடந்த ஜன்.14ல் மணிப்பூரில் துவங்கிய காங்கிரஸின் இந்த நடைப்பயணம் மார்ச் 20ல் மும்பையில் நிறைவடையவுள்ளது. 110 மாவட்டங்களையும் 15 மாநிலங்களையும் உள்ளடக்கிய 6713 கிலோமீட்டர்களைக் கடக்கவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com