நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் பழங்குடியினர் நிலங்கள் அபகரிப்பு: ராகுல் காந்தி

பாரத் ஜோடா யாத்திரையின் பகுதியாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் பயணத்தில் உள்ள ராகுல் காந்தி மக்களின் நில அபகரிப்பு குறித்து பேசியுள்ளார்.
ஜார்க்கண்டில் ராகுல் காந்தி | PTI
ஜார்க்கண்டில் ராகுல் காந்தி | PTI

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் பழங்குடி மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

பாரத் ஜோடா யாத்திரையின் பகுதியாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராகுல் காந்தி பேசியதாவது: 

“மாநிலத்தில் முன்பு ஆட்சிப் பொறுப்பில் இருந்த பாஜக அரசு பழங்குடி மக்களின் ஏக்கர் கணக்கிலான நிலங்ளை கையகப்படுத்தியதாகவும் மேலும் அவற்றை பயன்படுத்தாமல் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“காங்கிரஸ் அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தபோது பழங்குடியின மக்களின் நிலங்களை அந்தந்த கிராம ஊராட்சியின் ஒப்புதலின்றி எடுக்கக் கூடாது என்கிற சட்டத்தை உருவாக்கியது.

“ஜார்க்கண்ட்டில் நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் பழங்குடி மக்களின் நிலத்தை அபகரித்து கார்ப்பரேட் நிறுவனத்துக்கும் அரசு சாரா அமைப்புகளுக்கும் அளித்ததாக என்னிடம் பேசிய பெண்கள் தெரிவித்தனர்.

”சட்டப்படி அவர்கள் நிலங்கள் எடுத்து கொள்ளப்பட்டாலும்கூட சந்தை விலையை விட நான்கு மடங்கு அதிகமாக கொடுத்திருக்க வேண்டும். அந்த மக்களுக்கு இப்போது நிலங்களைத் திருப்பி கேட்கிறார்கள்” எனப் பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com