தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் நிதிஷ்குமார்!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பிகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று சந்திக்க உள்ளார். 

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:08 am

DIN

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பிகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று சந்திக்க உள்ளார். 

இந்தியா கூட்டணியிலிருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பிய பிறகு பிரதமருடன் நிதிஷ்குமாரின் முதல் சந்திப்பு இதுவாகும். 

மரியாதை நிமித்தமான சந்திப்பாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் பிப்.12ல் பிகார் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பைக் கருத்தில் கொண்டு இது முக்கியமான சந்திப்பாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. 

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி விரிவாக்கம் குடிறித்தும் நிதிஷ்குமாரும் மோடியும் விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரதமர் மட்டுமின்றி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரையும் நிதிஷ்குமார் சந்திக்கிறார்.

நிதிஷ் குமார்,  மூத்த தலைவர் சஞ்சய் ஜாவுடன் புதன்கிழமை காலை 11 மணியளவில் தில்லி புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.