நாடாளுமன்ற கேன்டீனில் எம்.பி.க்களுடன் மதிய உணவு சாப்பிட்ட பிரதமர் மோடி

நாடாளுமன்ற கேன்டீனில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி இன்று மதிய உணவு சாப்பிட்டார்.
நாடாளுமன்ற கேன்டீனில் எம்.பி.க்களுடன் மதிய உணவு சாப்பிட்ட பிரதமர் மோடி

நாடாளுமன்ற கேன்டீனில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி இன்று மதிய உணவு சாப்பிட்டார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த 31-ஆம் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடா் என்பதால், முதல் நாள் அமா்வில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உரையாற்றினாா்.

இதையடுத்து 2-ஆம் நாளான பிப்ரவரி 1-ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா். பட்ஜெட் கூட்டத்தொடா் வெள்ளிக்கிழமையுடன்(பிப். 9) நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், சனிக்கிழமைவரை மேலும் ஒரு நாளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாடாளுமன்ற கேன்டீனில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி இன்று மதிய உணவு சாப்பிட்டார். பிஜேடி தலைவர் சஸ்மித் பத்ரா, ஆர்எஸ்பி தலைவர் என்கே பிரேமச்சந்திரன், பிஎஸ்பியின் ரித்தேஷ் பாண்டே,  மத்திய அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் இந்நிகழ்வின்போது இருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com