மகாரஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான், காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜிநாமா செய்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் சிவசேனையில் இணைந்தார்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உடைந்து இரண்டாக பிளவடைந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களும் அக்கட்சியில் இருந்து விலகத் தொடங்கியுள்ளனர்.
கடந்த 2008 முதல் 2010 வரை மகாராஷ்டிர முதல்வராகவும், 2014 முதல் 2019 வரை மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்த அசோக் சவான், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இதனிடையே அசோக் சவான் விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.