கேரள முதல்வருக்கு ராகுல் கடிதம்!

காட்டு யானை தாக்கி வயநாட்டைச் சேர்ந்தவர் உயிரிழந்தது குறித்து கேரள முதல்வருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
கேரள முதல்வருக்கு ராகுல் கடிதம்!

கேரள மாநிலம் வயநாட்டில் யானை தாக்கி உயிரிழந்தது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

காட்டு யானை தாக்கி வயநாட்டைச் சேர்ந்தவர் சனிக்கிழமை உயிரிழந்தது குறித்து கேரள முதல்வருக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், பையம்பள்ளியைச் சேர்ந்த அஜீஷ் என்பவர் யானை தாக்கி உயிரிழந்தார். யானை தாக்கி மற்றொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கேரள முதல்வருக்கு ராகுல் கடிதம்!
பிப்.22 வரை தமிழக சட்டப்பேரவைக் கூட்டம்!

வனவிலங்குகளின் தாக்குதல்கள், குறிப்பாக யானைத் தாக்குதல்களால் வயநாட்டு மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களுக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, காடுகளை ஒட்டி வசிப்பவர்கள் எப்போதும் அச்சத்தில் வாழ்கின்றனர்.

நாங்கள் மீண்டும் மீண்டும் மனித-வனவிலங்கு மோதல் பிரச்னையை எழுப்பியுள்ளோம், மேலும் வயநாட்டில் இதுபோன்ற தாக்குதல்களைத் தணிக்க, குறிப்பாக விவசாயிகளைப் பாதுகாக்க உங்கள் தலையீட்டைக் கோருகிறோம். இந்த சிக்கலைச் சமாளிக்க ஒரு விரிவான செயல்திட்டம் இல்லாதது இன்னும் மோசமாகிவிட்டது. என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com