தேசியவாத காங்கிரஸ் எந்த அரசியல் கட்சியுடனும் இணையாது: சுப்ரியா சுலே

சரத் பவார் தலையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி எந்த அரசியல் கட்சியுடனும் இணையாது என்று மக்களவை உறுப்பினர் சுப்ரியா சுலே தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே
தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே

என்சிபி கட்சித் தலைவர் சரத் பவாரின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது அவர் கூறியது,

எங்கள் அணி எந்த அரசியல் கட்சியுடனும் இணையாது. கட்சி இணைப்பு பற்றிக் கேட்டபோது, மகா விகாஸ் அகாடியுடன் ஒரு பகுதியாக வரவிருக்கும் தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம்.

இன்றைய கூட்டம் வரவிருக்கும் பேரணிக்கு (இந்தியா கூட்டணி) திட்டமிடுவதை நோக்கமாகக் கொண்டது. பேரணியில் உரையாற்றும் தலைவர்களின் பெயர்களைப் பற்றிய விவாதம் நடந்தது என்று அவர் கூறினார்.

பவார், சுலே தவிர மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர்கள் அனில் தேஷ்முக் மற்றும் ராஜேஷ் தோபே, எம்.பி.க்கள் அமோல் கோல்ஹே மற்றும் ஸ்ரீனிவாஸ் பாட்டீல் மற்றும் பிற தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே
கோட் படத்தில் விஜயகாந்த்?

இதுகுறித்து புணே நகரப் பிரிவு தலைவர் பிரசாந்த் ஜக்தாப் கூறுகையில்,

எங்கள் கட்சி இணைப்பு குறித்த செய்தி தவறானது. புதிய பெயருடன் புதிய சின்னத்துடன் முன்வருவோம். இன்றைய கூட்டம் வரவிருக்கும் மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தல்களை கருத்தில் கொண்டு நடந்தது.

பிப்ரவரி 24 அன்று புணேவில் நடைபெறும் இந்தியக் கூட்டணியின் பேரணி குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com