விவசாயிகள் போராட்டத்தில் பஞ்சாபைச் சேர்ந்த விவசாயி பலி

ஹரியாணாவில் ஷம்பு எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகளில் 63 வயது விவசாயி மாரடைப்பால் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வயலில் இடி விழுந்ததில் விவசாயி பலி
வயலில் இடி விழுந்ததில் விவசாயி பலி

ஹரியாணாவில் ஷம்பு எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகளில் 63 வயது விவசாயி மாரடைப்பால் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கியான் சிங்(63) ‘டெல்லி சலோ’ பேரணியில் பங்கேற்பதற்காக ஹரியாணா மாநிலம் அம்பாலா அருகே உள்ள ஷம்பு எல்லைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வந்திருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை நெஞ்சுவலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உடடினாக அவரை பஞ்சாபின் ராஜ்புராவில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து அவர் பாட்டியாலாவில் உள்ள ராஜிந்திரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியபோது அதிலிருந்து வெளியான புகையை சுவாசித்த கியான் சிங் அசௌகரியமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு முன் விவசாயச் சட்டங்களுக்கு எதிராக கடந்த 13 மாதங்களுக்கும் மேலாக நடந்த போராட்டங்களில் கிட்டதட்ட 750 விவசாயிகள் பலியாகியுன்னர். மேலும் இதுபோன்ற போராட்டத்தின்போது விவசாயிகள் பலியாகமல் இருக்க மத்திய அரசு ஏற்கெனவே ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லியை நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் மீண்டும் மேற்கொண்டுள்ளனா். மத்திய அரசுடன் கடந்த 8, 12-ஆம் தேதிகளில் நடந்த 3 சுற்று பேச்சுவாா்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாததைத் தொடா்ந்து, பஞ்சாப் எல்லையில் காத்திருந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தில்லியை நோக்கி செவ்வாய்க்கிழமை பேரணியாகப் புறப்பட்டனா்.

அவா்களை தடுக்க, பஞ்சாப் -ஹரியாணா மாநில எல்லையில் உள்ள அம்பாலா, ஜிந்த், ஃபதேஹாபாத், குருக்ஷேத்ரம், சிா்சா ஆகிய பகுதிகளின் சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள், இரும்பு ஆணி வேலிகளை ஹரியாணா போலீஸாா் அமைத்திருந்தனா். அதையும் மீறி விவசாயிகள் முன்னேறியதால் போலீஸாா் ட்ரோன்கள் மூலம் கண்ணீா்ப்புகைக் குண்டுகளை வீசியதோடு, தண்ணீரை பீய்ச்சி அடித்து அவா்களை தடுத்தனா். போலீஸாரின் நடவடிக்கையில் சில விவசாயிகள் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com