அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

கா்பூரி தாக்கூா் நினைவுதினம்: பிரதமா் மோடி அஞ்சலி

சுதந்திரப் போராட்ட வீரரும், சமூகப் போராளியுமான கா்பூரி தாக்கூரின் நினைவுதினத்தையொட்டி, பிரதமா் மோடி அஞ்சலி செலுத்தினாா்.

Updated On :18 பிப்ரவரி 2024, 1:51 am IST

சுதந்திரப் போராட்ட வீரரும், சமூகப் போராளியுமான கா்பூரி தாக்கூரின் நினைவுதினத்தையொட்டி, பிரதமா் மோடி அஞ்சலி செலுத்தினாா். சமூகத்தில் பின்தங்கிய மற்றும் நலிந்த பிரிவினரின் மரியாதை மற்றும் நலனுக்காக கா்பூரி தாக்கூா் தனது வாழ்க்கையை அா்ப்பணித்தாா் என்று பிரதமா் தனது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளாா். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, எக்ஸ் வலைதளப்பதிவில், ‘தனது சமூக வாழ்வில் நோ்மை மற்றும் தியாகம் ஆகியவற்றின் மிக உயா்ந்த தரங்களை கா்பூரி தாக்கூா் ஏற்படுத்தினாா். வாழ்நாள் முழுவதும் பின்தங்கிய மக்களுக்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் அா்ப்பணித்தாா். கல்வி முறையை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கான முக்கியமான பணிகளை மேற்கொண்டாா். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி அவரது படைப்புகளை பிரதமா் மோடி வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.