‘காங்கிரஸ் குழப்பத்தில் உள்ளது..’: பிரதமர் மோடி

தில்லியில் நடைபெற்று வரும் பாஜக தேசிய கூட்டத்தில் தேர்தல் குறித்து பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
‘காங்கிரஸ் குழப்பத்தில் உள்ளது..’: பிரதமர் மோடி

தில்லியில் இரண்டு நாள் நிகழ்வாக பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “2014-ல் பிரதமராக பதவியேற்றபோது நம் விமர்சகர்கள் பலர், ஒரு மாநிலத்தைத் தாண்டி மோடிக்கு என்ன அனுபவம் இருக்கிறது எனக் கூறினார்கள். வெளியுறவுக் கொள்கைகள் குறித்து பல விஷயங்கள் பேசப்பட்டன. சமீபத்தில் நான் கத்தார் மற்றும் அமீரகத்திற்குச் சென்றிருந்தேன். பல நாடுகளுடன் நம் உறவு எப்படி இவ்வளவு வலிமையாக இருக்கிறது என்பதை உலகம் கவனித்துக் கொண்டிருக்கிறது. வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுடபத்தில் நம்முடைய வெளியுறவு சிறப்பாக உள்ளது. 5 அமீரக நாடுகள் அவர்களின் உயரிய மரியாதையை எனக்கு அளித்தனர். அது நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்டது அல்ல, 140 கோடி மக்களுக்கு வழங்கப்பட்டது.

காங்கிரஸின் மிகப்பெரிய பாவம் நம் பாதுகாப்புப் படையினரின் மன உறுதியை உடைத்துக் கொண்டிருப்பதுதான். நாட்டின் தேசிய பாதுகாப்பைக் காயப்படுத்த அவர்கள் எந்தக் கல்லையும் விட்டுவைக்கவில்லை. நமது பாதுகாப்புப் படையினரிடம் சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்து கேள்வியெழுப்பினர். சர்ஜிகல் ஸ்டிரைக் நடந்தபோது ஆதாரம் கேட்டனர். காங்கிரஸ் குழப்பத்தில் இருக்கிறது. காங்கிரஸில் ஒரு குழு, மோடியை அதிகமாக வெறுப்பதாகக் கூறுகிறது. இன்னொரு குழு, ‘மோடியை வெறுப்பதை நிறுத்துங்கள். அந்த வழியில் காங்கிரஸுக்கு இழப்புதான் ஏற்படும்’ என்கிறது.

அனைவரின் நம்பிக்கையையும் அடுத்த 100 நாள்களில் வெல்வோம். 2047-ல் இந்தியா சுதந்திரம் பெற்று நூறாண்டை நிறைவு செய்யும்போது இதை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்தில் பணியாற்றி வருகிறோம். இந்தியாவை உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாற்றுவோம். இது மோடியின் உத்திரவாதம்.” எனக் கூறினார்.

‘காங்கிரஸ் குழப்பத்தில் உள்ளது..’: பிரதமர் மோடி
ஏழைகளைப் பற்றி மு.க. ஸ்டாலின் சிந்திப்பாரா? அமித்ஷா கேள்வி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com