அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுகிறது: சரத் பவார் குற்றச்சாட்டு

ஒத்த எண்ணம் கொண்ட அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைந்து பிற்போக்கு போக்குகளை எதிர்த்துப் போராடுவதே பன்சாரேவுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுகிறது: சரத் பவார் குற்றச்சாட்டு

கோலாப்பூர்: நாட்டில் அடிப்படை உரிமைகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாகவும், முற்போக்கு சித்தாந்தத்தைப் பற்றி மோடி அரசு கவலைப்படவில்லை என்று மூத்த அரசியல்வாதி சரத் பவார் குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரம் மாநிலம் கோலாப்பூர் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இடதுசாரி தலைவர் கோவிந்த் பன்சாரேவின் நினைவிடத்தைத் திறந்து வைத்த பின்னர் அவர் பேசுகையில், "பிற்போக்கு" சக்திகளுக்கு எதிராக ஒன்றுபட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

“இன்று, ஆட்சி அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது, செய்தி சேனல்கள் முடக்கப்படுகின்றன. பேச்சுரிமை நசுக்கப்படுகிறது, எழுத்து சுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்றும் அதிகாரத்தில் இருப்பவர்கள் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல்கள் பற்றி கவலைப்படுவதில்லை" என்று பவார் குற்றம் சாட்டினார்.

அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுகிறது: சரத் பவார் குற்றச்சாட்டு
5-ம் கட்டப் பேச்சு: விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு!

சரத்சந்திர பவார்

நாட்டில் "பிற்போக்கு" சக்திகள் அதிகரித்து வரும் நிலையில், ஆட்சியாளர்கள் முற்போக்கு சித்தாந்தத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்சந்திர பவார் கூறினார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது சாமானிய மக்களின் பிரச்னைகள் விவாதிக்கப்படும் போது மட்டும் மாநிலங்களவையில் 20 நிமிடங்கள் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதாக கூறினார்.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது, புணேயில் நடந்த 'நிர்பய் பானோ' நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது தாக்குதல், மூத்த பத்திரிகையாளர் நிகில் வாக்லே கார் மீது தாக்குதல், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அமைச்சர்களை சிறையில் அடைத்து துன்புறுத்துதல்” போன்ற சம்பவங்களை பட்டியலிட்டவர், மத்திய அமலாக்கத் துறை போன்ற மத்திய அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கும் நபர்களுக்கும், உண்மையாக ஊழல் செய்பவர்களுக்கும் வெவ்வேறு அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் இதற்கு எதிராக ஒத்த எண்ணம் கொண்ட அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைந்து பிற்போக்கு போக்குகளை எதிர்த்துப் போராடுவதே பன்சாரேவுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்றார்.

டி ராஜா

சிபிஐ தலைவர் டி ராஜா, மறைந்த பன்சாரேயுடனான தனது தொடர்பை நினைவு கூர்ந்தார்.

"தற்போது, அனைத்து மக்களின் முதன்மையான பொறுப்பு இந்தியாவைக் காப்பாற்றுவதாகும்.மதவாத சக்திகளுக்கு எதிராக மக்கள் வாக்களித்து பாஜகவை தோற்கடிக்க வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com