வீடு இடிந்ததில் நேர்ந்த விபரீதம்

வீடு இடிந்ததில் நேர்ந்த விபரீதம்

முராக்பூர் வீடு இடிந்த சம்பவம்: ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் காயம்
Published on

புது தில்லி: கோட்லா முராக்பூர் பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியதாகவும் மற்றொருவர் காயமுற்றதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.

தெற்கு தில்லி உதவி ஆணையர் அங்கித் செளகான், குருத்வாரா சாலையில் உள்ள வீடு இடிந்ததாக காவலர்களுக்கு மாலை 5 மணிக்கு தகவல் கிடைத்ததாக குறிப்பிட்டார்.

முதல் மாடியின் பகுதி சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 32 வயதான வினய் என்பவர் உயிரிழந்தார். மற்றொரு நபர் நாது (30) காயமுற்றார்.

சிலர் கட்டட இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியிருக்கலாம் என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணி நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

X
Dinamani
www.dinamani.com