பக்கங்களை முடக்க அரசு ஆணை: எக்ஸ் பதிலடி!

இந்திய அரசின் ஆணைகள் - எலான் மஸ்க்கின் எக்ஸ் பதில்
பக்கங்களை முடக்க அரசு ஆணை: எக்ஸ் பதிலடி!

பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புடைய 177 கணக்குகளை முடக்க சமூக வலைத்தளங்களுக்கு மத்திய தொழில்நுட்ப அமைச்சகம் சில நாள்களுக்கு முன்பு ஆணையிட்டது.

இந்திய அரசின் இந்த செயல் ஆணையைப் பெற்றுள்ள எலான் மஸ்க்கின் எக்ஸ் தளம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

ஆணையில் குறிப்பிட்ட கணக்குகள் மற்றும் பதிவுகள் இந்தியாவில் அபராதம், கைது உள்ளிட்ட சாத்தியமான நடவடிக்கைகளுக்குரியவை எனக் குறிப்பிடப்பட்டதாக எக்ஸ் தெரிவித்துள்ளது.

எக்ஸ் நிறுவனத்தின் உலக அரசுகள் விவகார பிரிவு வெளியிட்ட பதிவில், இந்திய அரசு குறிப்பிட்ட கணக்குகளையும் பதிவுகளையும் தாங்கள் இந்தியாவில் மட்டும் காட்டாதவாறு முடக்கியுள்ளதாகவும் இந்த செயல் மீது தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளது.

கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் கணக்குகளை முடக்குவது சரியன்று எனத் தெரிவித்துள்ளது.

மேலும் இந்திய அரசின் இந்த ஆணை குறித்து முறையீடு செய்துள்ளதாக குறிப்பிட்ட எக்ஸ், “சட்ட விதிகளின் காரணமாக அரசின் ஆணையை எங்களால் வெளியிட முடியாது. ஆனால் மக்கள் முன்பு வைப்பதே வெளிப்படைத்தன்மைக்கு ஆதாரமானது. இந்த வெளிப்படைத்தன்மை இல்லாதது, பொறுப்பின்மை மற்றும் தன்னிச்சையான முடிவெடுக்கும் நிலைக்கு வழிவகுக்கும்” எனத் தெரிவித்துள்ளது.

யார் கணக்குகள் முடக்கப்பட்டனவோ அவர்களுக்கு எக்ஸ் அறிவிப்பு செய்துள்ளதாகவும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com