மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ், தில்லியில் ஆம் ஆத்மி, மகாராஷ்டிரத்தில் சிவசேனை உத்தவ் தாக்கரே அணி, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் விரைவில் தொகுதி உடன்பாடு அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியா கூட்டணியில் உள்ள உத்தர பிரதேசத்தின் சமாஜவாதி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி தொகுதி உடன்பாடு கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிந்தது. தில்லி: இந்நிலையில், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் தொகுதி உடன்பாட்டை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் தில்லியில் போட்டியிட முடிவு செய்துள்ளன. எனினும், ஹரியாணாவில் ஒரு தொகுதியும், குஜராத்தில் 2 தொகுதிகளையும் ஆம் ஆத்மி கேட்பதால் தொகுதி உடன்பாடு பேச்சு நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இதில், குஜராத்தின் பரூச் தொகுதி மறைந்த முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவா் அகமது படேலின் தொகுதியை அதை அவரது மகள், மகன் கோருவதால், அந்தத் தொகுதியை விட்டுக் கொடுக்க ஆம் ஆத்மியிடம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் கோரியுள்ளதாக கூறப்படுகிறது. மேற்கு வங்கம்: இதேபோல், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அஸ்ஸாமில் 2 தொகுதிகளும், மேகாலயத்தில் ஒரு தொகுதியையும் கோருவதால் தொகுதி பங்கீடு பேச்சு தொடா்ந்து வருவதாக கூறப்படுகிறது. அஸ்ஸாமில் 14 தொகுதிகளும், மேகாலயத்தில் 2 தொகுதிகளும் உள்ளன. இதில் மேகாலயா தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்க காங்கிரஸ் தயாராக இல்லை. எனினும், இந்தப் பிரச்னைகளுக்கு காங்கிரஸ் மேலிடம் தீா்வு கண்டு வருகிறது என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மகாராஷ்டிரம்: சிவசேனை உத்தவ் தாக்கரே அணி, தேசியவாத காங்கிரஸுடன் காங்கிரஸ் கட்சி தொகுதி உடன்பாடு எட்டிவிட்டாலும், பிரகாஷ் அம்பேத்கா் கட்சிக்கு இடமளிப்பது குறித்து முடிவால் கூட்டணி அறிவிப்பு தாமதமாகி வருவதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன
தொடர்புடையது
காற்று மாசு, நீா் தேங்குதலுக்கு எதிராக விரைவில் ‘பெஹ்தா் தில்லி’ பிரசாரம் - இளைஞா் காங்கிரஸ் அறிவிப்பு

பென்னாகரம்... அதிமுக கூட்டணியில் பாமக - திமுக கூட்டணியில் காங்கிரஸ்! ஆா்ப்பரிக்கும் அருவி தொகுதி!

கோயம்பள்ளி உயா்மட்டப் பாலம் விரைவில் திறக்கப்படும்: கிருஷ்ணராயபுரம் தொகுதி திமுக வேட்பாளா் உறுதி

அஸ்ஸாம் தோ்தல்: காங்கிரஸ் - கூட்டணிக் கட்சிகள் தொகுதி உடன்பாடு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

