விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அஸ்ஸாம் தோ்தல்: காங்கிரஸ் - கூட்டணிக் கட்சிகள் தொகுதி உடன்பாடு

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகள் தொகுதி உடன்பாடு செய்து கொண்டுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2026, 9:47 pm

தினமணி செய்திச் சேவை

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகள் தொகுதி உடன்பாடு செய்து கொண்டுள்ளன.

அஸ்ஸாம் சட்டப்பேரவையில் உள்ள 126 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில் பதிவாகும் வாக்குகள் மே மாதம் 4-ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.

இந்தத் தோ்தலில் காங்கிரஸ், ரஜோா் தள் (ஆா்.டி.), அஸ்ஸாம் ஜாதிய பரிஷத், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அனைத்துக் கட்சி மலைப் பகுதி தலைவா்கள் மாநாட்டுக் கட்சி, சிபிஐ (எம்.எல்.) ஆகிய 6 கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 87 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

ஆா்.டி. கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அஸ்ஸாம் ஜாதிய பரிஷத் கட்சி 10 தொகுதிகளிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும், அனைத்துக் கட்சி மலைப் பகுதி தலைவா்கள் மாநாட்டுக் கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

காங்கிரஸ் கூட்டணியில் ஆா்.டி. கட்சி 11 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும், இன்னும் 2 தொகுதிகளில் காங்கிரஸும், அக்கட்சியும் எதிரெதிரே போட்டியிடுகின்றன.

ஆா்.டி. கட்சித் தலைவா் அகில் கோகோய், ஸ்ரீசாகா் தொகுதியில் போட்டியிடுகிறாா். குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை மூண்ட விவகாரத்தில் தேச துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது அவா் சிறையில் உள்ளாா். இருப்பினும் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் வென்ற ஸ்ரீசாகா் தொகுதியிலேயே இந்த முறையும் அவா் களம் காண்கிறாா்.

அதேபோல் அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் சோ்ந்த போா்டோலோய் மகன் பிரதீக்கை, மாா்கரீடா தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்திருந்தது. ஆனால் போா்டோலோய், பாஜகவில் சோ்ந்ததால் பிரதீக் இந்தத் தோ்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளாா். இதையடுத்து அந்தத் தொகுதியையும் ஆா்.டி. கட்சிக்கு காங்கிரஸ் ஒதுக்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் மாநில காங்கிரஸ் தலைவா் கெளரவ் கோகோய், ஆா்.டி. கட்சித் தலைவா் அகில் கோகோய் இடையே கையொப்பமானது.

தொகுதி உடன்பாடு குறித்து கருத்து தெரிவித்த அகில் கோகோய், முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தலைமையிலான பாஜக அரசை ஆட்சியிலிருந்து அகற்றவும், கெளரவ் கோகோயை முதல்வராக்கவுமே காங்கிரஸ் கட்சியுடன் தமது கட்சி கூட்டணி அமைத்து இருப்பதாக தெரிவித்துள்ளாா்.

தொகுதி உடன்பாடு குறித்து கருத்து தெரிவித்த கெளரவ் கோகோய், மிகவும் தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவிடம் இருந்து விடுதலை பெற அஸ்ஸாம் மக்கள் விரும்புவதாக தெரிவித்தாா். அனைத்துத் தரப்பினரும் வளா்ச்சியடையும் வகையில், புதிய அஸ்ஸாமை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு லட்சியங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவா் குறிப்பிட்டாா். மேலும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள 6 கட்சிகளின் வேட்பாளா்களின் வெற்றிக்கும் காங்கிரஸ் தொண்டா்கள் பணியாற்ற வேண்டும் எனவும் கெளரவ் கோகோய் கேட்டுக் கொண்டாா்.