அஸ்ஸாமின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களான எதிர்க்கட்சித் தலைவர் தேபப்ரதா சைகியா, அகில் கோகோய், லுரின்ஜோதி கோகோய், ஜகதீஷ் புயான் மற்றும் ராஜன் கோஹைன் உள்ளிட்ட அனைவரும், தத்தமது தொகுதிகளில் பின்தங்கியுள்ளதாக வெளியான தேர்தல் ஆணையத் தரவுகள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் தலைவர் சைகியா, சிவசாகர் மாவட்டத்தின் நசிரா தொகுதியில் 4,967 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், சைகியா பெற்ற 6,640 வாக்குகளுக்கு எதிராக, பாஜகவின் மயூர் போர்கோஹைன் 11,607 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.
சிவசாகர் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ளப் போட்டியிடும் ராய்ஜோர் தல் கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான அகில் கோகோய் முதல் சுற்று முடிவிலேயே பின்தங்கியுள்ளார்.
பாஜகவின் குஷால் தோவாரி பெற்ற 5,171 வாக்குகளுக்கு எதிராக, இவர் 3,262 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் அஸ்ஸாம் கன பரிசத் கட்சியின் பிரதீப் ஹசாரிகா, சிவசாகர் தொகுதியில் முதல் சுற்று முடிவில் 443 வாக்குகளைப் பெற்றுள்ளது. அஸ்ஸாம் ஜாதிய பரிஷத் கட்சியின் தலைவர் லுரின்ஜோதி கோகோயும், தனக்கு மிக நெருக்கமான போட்டியாளரான பாஜக வேட்பாளரை விடப் பின்தங்கியுள்ளார்.
மூன்று சுற்றுகளின் முடிவில் கோகோய் 11,845 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், பாஜகவின் சக்ரதர் கோகோய் 14,360 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.
அஸ்ஸாம் ஜாதிய பரிஷத்யின் பொதுச்செயலாளர் ஜகதீஷ் புயான், சதியா தொகுதியில் இரண்டாம் சுற்று முடிவில் 5,759 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
பாஜக வேட்பாளர் போலின் சேட்டியா 10,830 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், இவர் 5,071 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
தேர்தலுக்கு முன்பு அஸ்ஸாம் ஜாதிய பரிஷத் கட்சியில் இணைந்த, முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவைச் சேர்ந்தவருமான ராஜன் கோஹைன், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஜிது கோஸ்வாமியை விடப் பின்தங்கியுள்ளார். கோஸ்வாமி 5,324 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், கோஹைன் 2,570 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
ஹோஜாய் மாவட்டத்தின் பின்னகண்டி தொகுதியில் போட்டியிடும் அகில இந்திய ஐக்கிய ஐனநாயக முன்னனி கட்சியின் தலைவர் பத்ருதீன் அஜ்மல், மூன்று சுற்றுகளின் முடிவில் அஸ்ஸாம் ஜாதிய பரிஷத் வேட்பாளர் ரெஜாவுல் கரீம் சௌத்ரியை விட 2,869 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அஜ்மல் 13,298 வாக்குகளைப் பெற்ற நிலையில், சௌத்ரி 10,429 வாக்குகளைப் பெற்றார்.
பின்னாகண்டியில், ஆளும் கூட்டணியைச் சேர்ந்த அஸ்ஸாம் கன பரிஷத் கட்சியைச் சேர்ந்த ஷஹாப் உத்தின் மஜும்தார் 2,537 வாக்குகளைப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணையத் தரவுகள் தெரிவிக்கின்றன.
Summary
All major opposition leaders in Assam, including Leader of the Opposition Debabrata Saikia, Akhil Gogoi, Lurinjyoti Gogoi, Jagadish Bhuyan and Rajen Gohain, were trailing in their respective constituencies, according to Election Commission data on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜோர்ஹட் தொகுதியில் கௌரவ் கோகோயை பின்னுக்குத் தள்ளிய பாஜக!

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாதுகாப்புக் குறைவு: அஸ்ஸாம் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

அச்சமற்ற புதிய அஸ்ஸாம் உருவாகும்: வாக்களித்தார் கௌரவ் கோகோய்!

அஸ்ஸாம் முதல்வருக்கு மாஃபியாவுடன் தொடர்பு: கௌரவ் கோகோய் குற்றச்சாட்டு!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை


