ரூ.1 கோடி வேண்டாம்; நீதிதான் வேண்டும்: பலியான விவசாயி குடும்பம்

ரூ.1 கோடி வேண்டாம்; நீதிதான் வேண்டும் என பலியான விவசாயி குடும்பம் வலியுறுத்தியிருக்கிறது.
ரூ.1 கோடி வேண்டாம்; நீதிதான் வேண்டும்: பலியான விவசாயி குடும்பம்
-

விவசாயிகள் போராட்டத்தின் போது பலியான விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்துக்கு பஞ்சாப் அரசு அறிவித்த ரூ.1 கோடியை வேண்டாம் என நிராகரித்த குடும்பத்தினர், தங்களுக்கு நீதிதான் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் கனௌரி எல்லையில், புதன்கிழமை மாலை நடந்த விவசாயிகளின் போராட்டத்தின் போது பலியான சுப்கரன் சிங் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் இன்று காலை அறிவித்திருந்தார்.

ஆனால், ரூ.1 கோடி நிவாரண நிதி தங்களது குடும்பத்துக்குத் தேவையில்லை என்றும், எங்கள் குழந்தையின் மரணத்துக்கு நீதிதான் வேண்டும், அவனுக்கு பதிலாக பணமோ, அரசு வேலையோ ஈடாக முடியாது என்று கூறியுள்ளனர்.

மேலும், குற்றவாளிகள் தண்டிக்கப்படாதவரை, விவசாயிகளின் போராட்டத்தின் போது பலியான சுப்கரன் சிங்கின் உடலை கூறாய்வு செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றும் விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துவிட்டனர்.

முன்னதாக, ஹிசார் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஹரியாணா விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ரூ.1 கோடி வேண்டாம்; நீதிதான் வேண்டும்: பலியான விவசாயி குடும்பம்
புடின் எதிர்ப்பு அடையாளமாகும் நவால்னி மனைவி! ரஷிய அதிபர் தேர்தல் நேரத் திருப்பங்கள்

மத்திய அரசுக்கு எதிராக நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தின் போது பலியான சுப்கரன் சிங் குடும்பத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நிவாரண நிதியும், அவரது இளைய சகோதரிக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்றும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பகவந்த் மான் உறுதியளித்துள்ளார்.

இது குறித்து பகவந்த் மான் தனது எகஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, விவசாயிகளின் போராட்டத்தின் போது, கனௌரி எல்லையில் பலியான சுப்கரன் சிங் குடும்பத்துக்கு பஞ்சாப் அரசு சார்பில் நிவாரணமாக ரூ.1 கோடி வழங்கப்படும் என்றும், அவரது இளைய சகோதரிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் பதிவிட்டுள்ளார்.

மேலும், சுப்கரன் மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கும், ஹரியாணா போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து வெள்ளிக்கிழமை கருப்பு தினம் அனுசரிக்கப்படும் என்றும், பிப். 26-ஆம் தேதி டிராக்டா் பேரணி நடத்தப்படும் என்றும் நேற்று விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

ரூ.1 கோடி வேண்டாம்; நீதிதான் வேண்டும்: பலியான விவசாயி குடும்பம்
மாதவிடாய் காலங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம்; பயிா்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் இருந்து தில்லியை நோக்கி பேரணியாகப் புறப்பட்ட விவசாயிகளை ஹரியாணா அரசு எல்லையில் தடுத்து நிறுத்தி உள்ளது. பஞ்சாபின் கனெளரி எல்லையிலிருந்து விவசாயிகள் புதன்கிழமை தில்லியை நோக்கி பேரணியைத் தொடங்கியபோது அவா்கள் மீது ட்ரோன் மூலம் கண்ணீா்ப் புகைக் குண்டுகளை ஹரியாணா போலீஸாா் வீசினா்.

அப்போது ஏற்பட்ட மோதலில் 21 வயதான விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்தாா். 12 போலீஸாா் காயமடைந்தனா். இந்தச் சம்பவம் குறித்து வியாழக்கிழமை நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா். விவசாயி உயிரிழப்பு தொடா்பாக கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், அவரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும், சம்யுக்த விவசாய கூட்டமைப்பின் தலைவா் பல்பீா் சிங் தெரிவித்தாா். பஞ்சாப் எல்லைக்குள் நுழைந்து விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி, 30 டிராக்டா்களை ஹரியாணா போலீஸாா் சேதப்படுத்திவிட்டனா் எனவும், இதுகுறித்து பஞ்சாப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் மற்றொரு விவசாய சங்கத் தலைவா் ஸ்வரன் சிங் பாந்தா் தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com