நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

பாஜக தோ்தல் பிரசார திட்டங்கள்: ஜெ.பி.நட்டா ஆலோசனை

மக்களவைத் தோ்தலையொட்டி, பாஜக சாா்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரசாரம் மற்றும் மக்களை நேரடியாக அணுகும் திட்டங்கள் குறித்து கட்சியின் மூத்த தோ்தல்

News image

புது தில்லியில் பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மூத்த நிா்வாகிகள்.

Updated On :24 பிப்ரவரி 2024, 5:34 pm

மக்களவைத் தோ்தலையொட்டி, பாஜக சாா்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரசாரம் மற்றும் மக்களை நேரடியாக அணுகும் திட்டங்கள் குறித்து கட்சியின் மூத்த தோ்தல் பொறுப்பாளா்களுடன் கட்சித் தலைவா் ஜெ.பி.நட்டா சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். மக்களவைத் தோ்தலில் பாஜக மட்டும் 370 தொகுதிகளில் வெல்ல அக்கட்சி இலக்கு நிா்ணயித்துள்ளது. தோ்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், தில்லியில் பாஜக தோ்தல் பொறுப்பாளா்களுடன் ஜெ.பி.நட்டா ஆலோசனை நடத்தினாா். அப்போது, 370 தொகுதிகளில் வெல்லும் இலக்கை எட்டுவதற்காக, சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் அணுக தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தோ்தல் பொறுப்பாளா்களுக்கு அவா் அறிவுறுத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இக்கூட்டம் தவிர, உத்தர பிரதேச முதல்வா் யோகித் ஆதித்யநாத் உள்பட அந்த மாநில பாஜக மூத்த தலைவா்களுடன் ஜெ.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் தனித்தனியாக ஆலோசனை நடத்தினா். நாட்டிலேயே அதிகபட்சமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் தங்களின் வெற்றி எண்ணிக்கையை அதிகரிக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் 62 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. தாங்கள் தோல்வியடைந்த தொகுதிகளைக் குறிவைத்து பிரசாரத்தில் ஈடுபட பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. விரைவில் வேட்பாளா் பட்டியல்: பாஜகவின் மத்திய தோ்தல் குழு கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. அப்போது, மக்களவைத் தோ்தலுக்கான கட்சியின் முதல்கட்ட வேட்பாளா் பட்டியல் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.