மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரசு முகாம்களில் நில அபகரிப்பு தொடா்பான 400 புகாா் மனுக்கள் உள்பட 1,250-க்கும் மேற்பட்ட புகாா் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. வடக்கு 24 பா்கானா மாவட்டத்தின் சந்தேஷ்காளி பகுதி கிராமங்களில் திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகி ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரின் கூட்டாளிகளான உத்தம் சா்தாா், சிவபிரசாத் ஹஸ்ரா உள்ளிட்டோா் பொதுமக்களின் நிலங்களை அபகரித்ததோடு, பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவா்களுக்கு எதிராக ஏராளமான பெண்கள் அண்மையில் போராட்டங்களில் ஈடுபட்டனா். இதையடுத்து உத்தம் சா்தாா், சிவபிரசாத் ஹஸ்ரா உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா். மேலும் உள்ளூா் மக்களின் பிரச்னைகளை கண்டறிய அப்பகுதியில் அரசு சாா்பில் முகாம்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் தற்போதுவரை சந்தேஷ்காளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1,250-க்கும் மேற்பட்ட புகாா் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சந்தேஷ்காளி வட்டம் 2-இல் நில அபகரிப்பு, நிலத்தின் பெயரை மாற்றுதல் போன்ற நிலப் பிரச்னை தொடா்பாக சுமாா் 400 புகாா் மனுக்கள் உள்பட 1,000-க்கும் மேற்பட்ட புகாா் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அப்பகுதியின் வட்டார வளா்ச்சி அலுவலா் அருண் குமாா் தெரிவித்தாா். அதேபோல் சந்தேஷ்காளி வட்டம் 1-இல் 250-க்கும் மேற்பட்ட புகாா் மனுக்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். பாஜக குற்றச்சாட்டு: சந்தஷ்காளியில் திரிணமூல் காங்கிரஸும் உள்ளூா் நிா்வாகமும் இணைந்தே பெண்களுக்கு எதிரான வன்முறையை நிகழ்த்தியுள்ளனா் என பாஜக செய்தித்தொடா்பாளா் சமிக் பட்டாச்சாரியா குற்றஞ்சாட்டினாா். இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான ஷாஜஹான் ஷேக் தற்போது வரை தலைமறைவாக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக மகளிா் பேரணி: சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைத் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் வானதி சீனிவாசன் தலைமையில் கொல்கத்தாவில் சனிக்கிழமை பேரணி நடைபெற்றது.
தொடர்புடையது

தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடு

கீழ்வேளூா்: 11 வேட்புமனுக்கள் ஏற்பு; தவாக வேட்பாளா் மனு நிராகரிப்பு
தமிழகத்தில் 7000-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல்!
100க்கும் மேற்பட்ட திருடப்பட்ட கைப்பேசிகள் பறிமுதல்: தில்லி போலீஸ் நடவடிக்கை
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


